உத்தர பிரதேசத்தில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. லக்னோவில் தனது வாக்கை செலுத்திய பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பகுஜன் சமாதி கட்சி தலைவர் மாயாவதி மத்திய அமைச்சர் அமித் ஷாவை பாராட்டியதோடு அவரது தேர்தல் வாக்குப்பதிவு மதிப்பீடை ஒப்புக்கொள்வதாக தெரிவித்தார்.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்திற்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. பாஜக, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் என பல முனை போட்டி நிலவுகிறது. 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில் இன்று 4வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மாயாவதி லக்னோவில் தனது வாக்கை பதிவு செய்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாயாவதி, அவரின்(அமித் ஷா) தேர்தல் மதிப்பீடு சரியானது. முஸ்லீம் மக்கள் ஏற்கனவே சமாஜ்வாதி கட்சி மீது கோபத்தில் உள்ளது. ஏன் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்? சமாத்வாதி கட்சிக்கு வாக்களிப்பது குண்டர்கள் ராஜ்ஜியம் மற்றும் மாஃபியா ராஜ்ஜியத்துக்கு வாக்களிப்பதற்கு சமம் என்று உபி மக்கள் ஏற்கனவே அவர்க்ளை நிராகரித்துவிட்டனர். ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பதை சமாஜ்வாதி கட்சித் தலைவர்களின் முகமே சொல்கிறது’ என்று கூறினார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடியை விவாதத்திற்கு அழைத்த இம்ரான் கான்... சசிதரூர் கிண்டல்
சமாஜ்வாதி கட்சி தொடர்பான அமித் ஷாவின் கருத்து அவரது பெருந்தன்மையை காட்டுவதாகவும் மாயாவதி கூறினார். முன்னதாக நியூஸ்18 ஊடகத்துக்கு பிரத்யேக பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மக்களிடையே தனது இணக்கத்தை இழந்துவிட்டதாக கூறுவது தவறு. அவர்கள் வாக்குகளை பெறுவார்கள் என்று நம்புகிறேன். இந்த வாக்குகள் எப்படி வெற்றியாக மாறும் என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அவர்கள் வாக்குகளை பெறுவார்கள். பல்வேறு இடங்களில் முஸ்லீம்கள் அவர்களை ஆதரிப்பார்கள்’ என்று கூறியிருந்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.