Home » News » National » UP POLICES NEW CAMS CAN SENSE WOMEN UNDER THREAT ARU

பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்த நவீன டெக்னாலஜி - உ.பி காவல்துறையின் புதிய முயற்சி

பொதுவெளியில் நிறுவப்படும் கேமராக்கள், அதன் கண்ணில் படும் பெண்களின் முகபாவனைகளின் அடிப்படையில் அவர் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறாரா என்பதை கண்டறியும்.

பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்த நவீன டெக்னாலஜி - உ.பி காவல்துறையின் புதிய முயற்சி
மாதிரி புகைப்படம்
  • Share this:
செயற்கை நுண்ணறிவுடன் கூடிய கேமராக்கள் மூலம் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் பெண்களை கண்டறிந்து அவர்களின் புகைப்படங்களை எடுத்து அருகாமையில் இருக்கும் காவல் நிலையத்திற்கு தானாகவே அனுப்பி வைக்கும் புதிய தொழில்நுட்பத்தின் வாயிலாக பெண்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்தும் புதிய முயற்சியில் உத்தரப்பிரதேச காவல்துறை இறங்கியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு கவலைதரும் விஷயமாக உருவெடுத்துள்ளது. தேசிய மகளிர் ஆணையம் இதில் கவனம் செலுத்த தொடங்கியுள்ள நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் களமிறங்கியிருக்கிறது அம்மாநில காவல்துறை.

அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் பெண்களை கண்டறிவதற்காக செயற்கை நுண்ணறிவுடன் கூடிய கேமராக்களை


பொது இடங்களில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் முதலில் லக்னோ நகரில் அமல்படுத்தப்பட உள்ளது.

பொதுவெளியில் நிறுவப்படும் கேமராக்கள், அதன் கண்ணில் படும் பெண்களின் முகபாவனைகளின் அடிப்படையில் அவர் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறாரா என்பதை கண்டறியும். பெண்களின் முக பாவனைகளின் மாற்றம் இருந்தால் அவர் பின் தொடர்தலுக்கோ, அச்சுறுத்தலுக்கோ அல்லது ஈவ் டீஸிங்கிற்கோ ஆளாகியிருக்கலாம். எனவே அவர்களின் புகைப்படங்களை பதிவு செய்யும் கேமராக்கள் அதனை தானியங்கி முறையில் அருகாமையில் இருக்கும் காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும். சிக்கலில் இருக்கும் பெண், அவர் மொபைலை எடுத்து அவசர உதவி எண்களை டயல் செய்யும் முன்பாகவே அவர் குறித்த தகவல் சென்று விடும். இதன் மூலம் அச்சுறுத்தலில் இருக்கும் பெண்களுக்கு காவல்துறையினர் உதவி உடனடியாக சென்றடையும்.

இவ்வகையான செயற்கை நுண்ணறிவு கொண்ட கேமராக்களை நிறுவுவதற்காக பெண்கள் அதிகம் நடமாடும் 200 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக லக்னோ காவல் ஆணையர் டி.கே.தாக்கூர் தெரிவித்துள்ளார்.முன்னதாக நேற்று உத்தரப்பிரதேச டிஜிபியை நேரில் சந்தித்துப் பேசிய தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி ரேகா சர்மா, மாநிலத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு, நிலுவையில் உள்ள புகார்கள், பெண்கள் தொடர்பான புகார்களின் காவல்துறையினர்
எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கைகள் குறித்து பேசினார்.

அப்போது மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்டுள்ள 112 அவசர எண் உதவி சேவை, மிஷன் சக்தி, 'Safe City' திட்டம் ஆகியவை தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய தலைவரிடம் டிஜிபி எடுத்துரைத்தார்.

மேலும் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள 2019ம் ஆண்டுக்கான பாலியல் வன்புணர்வு குறித்த அறிக்கையில் உத்தரப்பிரதேசத்தில் ஒரு லட்சத்திற்கு 2.8 ஆக இருப்பதாக டிஜிபி கூறினார். இது கடந்த 2016 மற்றும் 2017ல்4.6 மற்றும் 4.0 ஆக இருந்தது. இதன் மூலம் இதர மாநிலங்களை விட பெண்களின் பாதுகாப்பில் உத்தரப்பிரதேச அரசு எடுத்த நடவடிக்கைகளை தெரிந்து கொள்ள முடியும் என டிஜிபி கூறினார்.
First published: January 21, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories