எருமைக்கு யார் ஓனர்? வினோத சண்டையில் வித்தியாசமான முடிவு

எருமைக்கு யார் ஓனர்? என்பதில் இரண்டு நபர்கள் சண்டையிட எளிதாக சண்டையை தீர்த்து வைத்துள்ளனர் உத்தரபிரதேச காவல்துறையினர்.

எருமைக்கு யார் ஓனர்? வினோத சண்டையில் வித்தியாசமான முடிவு
எருமைக்கு யார் ஓனர்?.
  • Share this:
யாருக்கு எருமை சொந்தம் என முடிவெடுப்பதில் உத்தரப்பிரேச மாநில காவல் துறையினர் எருமையிடமே முடிவை விட்டு விட்டனர். இறுதியில் தனது உரிமையாளரிடம் எருமை ஒப்படைக்கப் பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வெவ்வேறு கிராமங்களில் வசித்து வருபவர்கள் வீரேந்திரா மற்றும் தர்மேந்திரா. இருவரும் நண்பர்கள். வீரேந்திரா ஆசையாய் வளர்த்த எருமை காணாமல் போய் விட்டது. இந்நிலையில் ஒரு கால்நடை கண்காட்சியில் முஸ்லீம் என்ற நபர் எருமை யை விற்பதை கண்ட வீரேந்திரா நீங்கள் விற்பது எனது எருமை என சண்டையிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த அந்த நபர், தர்மேந்திரா என்பவர் இந்த எருமையை தனக்கு விற்று விட்டதாக கூறியுள்ளார்.
பிறகு இருவருக்கும் வாதம் முற்றிப்போக வீரேந்திரா மற்றும் முஸ்லீம் இருவரும் காவல் நிலையம் சென்றுள்ளனர். அங்கு வீரேந்திரா, தர்மேந்திரா மீது புகார் கொடுத்துள்ளார். அதில் தனது நண்பர் தர்மேந்திரா தனது எருமையை திருடியதாக குற்றம் சாட்டியிருந்தார், அதை ரசூலாபாத் கிராமத்தைச் சேர்ந்த முஸ்லீம் என்ற நபருக்கு  விற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட தர்மேந்திரா, எருமை தனக்கு சொந்தமானது என்றும், சில நாட்களுக்கு முன்பு முஸ்லிமுக்கு ரூ .19,000 க்கு விற்றதாகவும் கூறியுள்ளார்.என்னடா இது ஒரு மாட்டுக்கு மூவர் சண்டையிடுகின்றனர்.

யாருக்கு எருமை சொந்தம் என முடிவெடுப்பதில் காவல் துறையினர் எருமையிடமே முடிவை விட்டு விட்டனர். எருமை மாட்டை நிற்க வைத்து இருவரையும் மாட்டை அழைக்க கூறியுள்ளனர். அதில் தர்மேந்திராவின் அழைப்பை ஏற்ற மாடு பதிலுக்கு குரல் கொடுத்துள்ளது. வீரேந்திராவின் குரலை கேட்டு சற்றும் அசையாமல் இருக்க மாட்டின் உரிமையாளர் தர்மேந்திரா என்பதை அறிந்து காவல் துறையினர் மாட்டை அவரிடமே ஒப்படைத்தனர்.
First published: October 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading