ரவுடி விகாஸ் துபேவின் ஆதரவாளர்களுக்கு வலைவீச்சு - கண்டுபிடிக்க உதவினால் ரூ.2.5 லட்சம் பரிசு

உத்தரபிரதேசத்தில் 8 போலீசாரை கொன்ற ரவுடி விகாஸ் துபேவின் ஆதரவாளர்களை மத்திய பிரதேச போலீசார் தேடி வருகின்றனர்.

ரவுடி விகாஸ் துபேவின் ஆதரவாளர்களுக்கு வலைவீச்சு - கண்டுபிடிக்க உதவினால் ரூ.2.5 லட்சம் பரிசு
விகாஸ் துபே.
  • Share this:
உத்தரபிரதேசத்தில் 8 போலீசாரை கொன்ற ரவுடி விகாஸ் துபேவின் ஆதரவாளர்களை மத்திய பிரதேச போலீசார் தேடி வருகின்றனர். 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்ட விகாஸ் துபேவை உத்தரபிரதேச போலீசார் கைது செய்யச் சென்ற போது விகாசின் ஆதரவாளர்கள் சரமாரியாக போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

Also see:அதில் 8 போலீசார் உயிரிழந்தனர். இதனையடுத்து விகாசின் வீட்டை கான்பூர் மாவட்ட நிர்வாகம் இடித்துத் தள்ளியது. போலீசார் கைது செய்ய வருவதை போலீசில் இருந்தே சிலர் விகாசுக்கு தகவல் அளித்ததாகவும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் தலைமறைவாக உள்ள விகாசை கண்டுபிடிக்க உதவுவோருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading