உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள பதார்த்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் பரூக் ஆலம். இவரின் மனைவி நஸ்ரின். கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி அன்று பரூக் வீட்டில் அவரது மனைவி கொல்லப்பட்டிருந்தார். பரூக் காயங்களுடன் கிடந்தார். தனது வீட்டிற்கு நோயாளிகள் போல கொள்ளையர்கள் நுழைந்து தன்னை தாக்கிவிட்டு மனைவியை கொலை செய்துவிட்டதாக மருத்துவர் பரூக் தெரிவித்தார்.
இருப்பினும் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு சந்தேகம் ஏற்படவே, நஸ்ரின் இறுதி சடங்கு முடிந்த பின்னர் மருத்துவர் பரூக்கை அழைத்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது தான் அதிர்ச்சிக்குரிய உண்மை அம்பலமானது.
பரூக்கிற்கும் நஸ்ரினின் சகோதரிக்கும் கள்ள உறவு இருந்த நிலையில், இந்த விஷயம் மனைவி நஸ்ரினுக்கு தெரியவந்துள்ளது. இந்த உறவுக்கு மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கணவர் பரூக் அந்த பெண்ணை இரண்டாவது திருமணம் செய்ய போகிறேன் என தொடர்ந்து பிடிவாதமாக தெரிவித்து வந்துள்ளார்.
இதற்கு மனைவி குறுக்கே நின்ற நிலையில், காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதிக்கு முந்தைய நாள் இரவு மனைவியிடம் ஆசையாக பேசுவது போல நடித்த பரூக், அருகே நெருங்கியப் பின் துணியால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர், தன்னை பிளேடால் காயப்படுத்திக்கொண்டு திருடன் நுழைந்து தாக்கியது போல நாடகமாடியுள்ளார். இந்நிலையில், கொலை குற்றவாளி பரூக்கை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Uttar pradesh