கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் உத்தரபிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல்.. வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவு..

மாதிரி படம்

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் உத்தர பிரதேசத்தில் முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.

  • Share this:
    உத்தரபிரதேசத்தில் உள்ளாட்சி பதவி காலம் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால் கொரோனா பிரச்சினை காரணமாக தேர்தல் நடத்தப்படவில்லை. மேலும் இட ஒதுக்கீடு தொடர்பாக வழக்குகள் இருந்ததால் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் பழைய முறையில் இட ஒதுக்கீட்டை பின்பற்றி தேர்தல் நடத்தும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 15-ந்தேதியான இன்று முதல் 19-ந் தேதி, 26-ந்தேதி, 29-ந்தேதி ஆகிய 4 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். மே 2-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

    18 மாவட்டங்களில் 3 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள நிலையில், வாக்குச்சீட்டு மூலம் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அயோத்தி, ராம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் ஏராளமானோர் வாக்களித்து வருகின்றனர். காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

    கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்த பின்பே வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். முதற்கட்டத் தேர்தலில் 3 லட்சத்து 33 ஆயிரம் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். உத்தரபிரதேசத்தில் நேற்று மட்டும் 20,510 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

    மேலும் படிக்க... உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்க்கு கொரோனா

    இந்நிலையில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: