முகப்பு /செய்தி /இந்தியா / உ.பி அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு; நோய்த்தொற்றால் பலியாகும் 3வது அமைச்சர்!

உ.பி அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு; நோய்த்தொற்றால் பலியாகும் 3வது அமைச்சர்!

அமைச்சர்விஜய் காஷ்யப்

அமைச்சர்விஜய் காஷ்யப்

இரண்டாவது அலை பரவலில் இதுவரை உத்தரப்பிரதேசத்தில் 5 எம்.எல்.ஏக்கள் உயிரிழந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உத்தரப்பிரதேசத்தில் அமைச்சர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை, முதல் அலையைக் காட்டிலும் கொடிய பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களும் மீண்டும் ஊரடங்கிற்குள் சென்றுள்ளது. வைரஸ் சங்கிலித் தொடரை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் கையாளப்படுகின்றன. முந்தைய அலை பரவலைக் காட்டிலும் தற்போது பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை சாதனை அளவுகளை தொட்டுள்ளது.

பொதுமக்கள் மட்டும் இன்றி திரைத்துறையினர், அரசியல் வாதிகள், தொழில்துறை என அனைத்து துறை பிரபலங்களும் நோய்த்தொறால் உயிரிழப்பை சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் மேலும் ஒரு அமைச்சர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் வருவாய் மற்றும் வெள்ளத்தடுப்பு துறை அமைச்சரான விஜய் காஷ்யப் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 56.

இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பை சந்திக்கும் 3வது உத்தரப்பிரதேச மாநில அமைச்சராக விஜய் காஷ்யப் மாறியுள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு முதல் அலை பரவலின் போது கமல் ராணி வரும் மற்றும் கிரிக்கெட்டராக இருந்து அரசியல்வாதியாக மாறிய சேத்தன் சவுகான் ஆகிய இருவரும் நோய்த்தொற்றால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Read More:  கொரோனா உயிரிழப்பில் மிரட்டும் கர்நாடகா: டெல்லியை முந்தி 2ம் இடம் பிடித்தது!

இந்நிலையில் அமைச்சர் விஜய் காஷ்யப் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “பாஜக தலைவரும், உத்தரப்பிரதேச அமைசருமான விஜய் காஷ்யப் மறைவு மிகவும் சோகத்தை தந்துள்ளது. அவர் அடிமட்ட தொண்டர்களுடன் இணைந்த ஒரு தலைவராக இருந்தார், எப்போதும் பொது நலன் சார்ந்த பணிகளில் அர்ப்பணிப்புடன் இருந்தார். துக்கத்தின் இந்த தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல். ஓம் சாந்தி!” என பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் விஜய் காஷ்யப் மறைவுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் மற்றும் பாஜகவின் மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read More:  கொரோனாவால் உயிரிழந்த 300 நபர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்தவர் கொரோனாவால் மரணம்!

இரண்டாவது அலை பரவலில் இதுவரை உத்தரப்பிரதேசத்தில் 5 எம்.எல்.ஏக்கள் உயிரிழந்துள்ளனர். முன்னதாக Nawabganj தொகுதியின் கேசர் சிங் கேங்வர், சலோன் தொகுதியின் தால் பகதூர் கோரி, ஆரையா தொகுதியின் ரமேஷ் திவாகர், லக்னோ மேற்கு தொகுதியின் சுரேஷ் குமார் ஸ்ரீவத்சவா ஆகியோரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: BJP, Corona death, Uttar pradesh