காதலனை கரம்பிடித்த திருமணமான பெண்.... கணவனுக்கு 71 ஆடுகள் இழப்பீடு கொடுக்க பஞ்சாயத்து உத்தரவு

தான் வளர்த்த ஆடுகளை மகன் மூலம் வேறு ஒருவருக்கு வழங்க மாட்டேன் என காதலரின் தந்தை மறுத்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: August 20, 2019, 1:08 PM IST
காதலனை கரம்பிடித்த திருமணமான பெண்.... கணவனுக்கு 71 ஆடுகள் இழப்பீடு கொடுக்க பஞ்சாயத்து உத்தரவு
தான் வளர்த்த ஆடுகளை மகன் மூலம் வேறு ஒருவருக்கு வழங்க மாட்டேன் என காதலரின் தந்தை மறுத்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Web Desk | news18
Updated: August 20, 2019, 1:08 PM IST
திருமண பந்தத்தில் இருந்து விலகி காதலனுடன் சேர்ந்த பெண்ணிற்கு தண்டனையாக, அவரது கணவருக்கு 71 ஆடுகளை இழப்பீடாக வழங்க கிராம பஞ்சாய்த்து உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூரில் திருமணமான பெண் ஒருவர் தனது காதலருடன் சேர்ந்து வாழ விரும்பி வீட்டை விட்டு வெளியேறினார். அவர்களை பிடித்து பஞ்சாய்த்துக்கு கொண்டு வந்த கிராமத்தினர், அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக பாதிக்கப்பட்ட தன் மகனுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அவரது தந்தை கேட்டுள்ளார்.  ஊர் பஞ்சாயத்தின் விசாரணையில் அந்த பெண் காதலருடனே செல்ல வேண்டும் என்றால், இழப்பீடாக 71 ஆடுகளை அந்த பெண்ணின் கணவருக்கு கொடுக்க வேண்டும் என பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கியது.


இதற்கு ஒத்துக்கொண்ட மூவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதன்படி, இதையடுத்து பெண்ணை திருமணம் செய்தவருக்கு அப்பெண்ணின் காதலர் 71 ஆடுகளை நஷ்ட ஈடாக அளித்தார். ஆனால், தான் வளர்த்த ஆடுகளை மகன் மூலம் வேறு ஒருவருக்கு வழங்க மாட்டேன் என காதலரின் தந்தை மறுத்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... காதல் தம்பதிக்கு அடைக்கலம் - சிபிஎம் நிர்வாகி மீது தாக்குதல்
First published: August 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...