முகப்பு /செய்தி /இந்தியா / 10 நிமிடத்தில் 3 பாட்டில் மது குடிப்பதாக சவால்.. உயிரைப்பறித்த பந்தயம்..

10 நிமிடத்தில் 3 பாட்டில் மது குடிப்பதாக சவால்.. உயிரைப்பறித்த பந்தயம்..

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பந்தயத்தால் உயிரிழந்த நபரிடம் இருந்து ரூ.60,000 பணத்தை அவரது நண்பர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Uttar Pradesh, India

விளையாட்டு செயல்கள் சில நேரங்களில் விபரீதத்தில் முடியும் என்பதற்கு ஏற்ப உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு நபர் விளையாட்டாக பந்தயம் கட்டி அதில் தனது உயிரையே பறிகொடுத்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் 45 வயதான ஜெய் சிங்.ஆட்டோ ஓட்டுனரான இருவருக்கு 3 மகன்கள், ஒரு மகள் என 4 குழந்தைகள் உள்ளனர். மதுபோதைக்கு அடிமையான இவர், கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி அன்று தனது சக நண்பர்களான போலா மற்றும் கேசவ் ஆகியோருடன் இணைந்து மது அருந்த சென்றுள்ளார். பின்னர், அன்றைய இரவு ஜெய் சிங் வீட்டிற்கு வராத நிலையில் அவரது 16 வயது மகன் கரண் தந்தையை வீதி வீதியாக தேடியுள்ளார்.

பின்னர், சாலை பகுதியில் விழுந்து கிடந்த ஜெய் சிங்கை மகன் கண்டுபிடித்துள்ளார். தந்தையை மீட்டு மருத்துமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஜெய் சிங் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஜெய் சிங் தனது ஆட்டோவை கடனுக்கு வாங்கிய நிலையில், கடனை அடைக்க ரூ.60,000 தவனை தொகை வைத்திருந்துள்ளார்.அந்த பணமும் மாயமானது. சந்தேகத்தின் பேரில் ஜெய் சிங்கின் சகோதரர் சுக்பீர் சிங், காவல்துறையிடம் புகார் அளிக்க ஜெய் சிங்குடன் மது அருந்திய நண்பர்கள் போலா மற்றும் கேசவ் ஆகியோரை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது தான் அதிர்ச்சிக்குரிய உண்மை அம்பலமாகியுள்ளது.

அன்றைய தினம் தனது நண்பர்களிடம் ஜெய் சிங் பந்தயம் கட்டி மது அருந்தியுள்ளார். 10 நிமிடத்தில் 3 குவாட்டர் பாட்டில் மது குடித்து காட்டுகிறேன். நான் வெற்றிபெற்றால் பில்லை நீங்கள் கட்ட வேண்டும் என நணபர்கள் இருவரிடம் பந்தயம் கூறி, மூன்று பாட்டில்கள் வாங்கி மளமளவென குடித்துள்ளார். குறுகிய நேரத்தில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதுதான் அவரது உயிருக்கு எமனாக மாறியுள்ளது. அப்படியே சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரிடம் இருந்த ரூ.60,000 பணத்தையும் எடுத்துக்கொண்டு இரு நணபர்களும் தப்பி ஓடியுள்ளனர். இந்நிலையில், ஜெய் சிங் மரணம் தொடர்பாக நண்பர்கள் போலா மற்றும் கேசவ் ஆகியோரை கைது செய்த காவல்துறை அவர்கள் மீது இபிகோ 302 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது.

First published:

Tags: Alcohol, Crime News, Uttar pradesh