• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • குடும்ப மானத்தை வாங்கிட்டாரு.. தந்தையை கொன்ற மகன் சொன்ன பகீர் காரணம்!

குடும்ப மானத்தை வாங்கிட்டாரு.. தந்தையை கொன்ற மகன் சொன்ன பகீர் காரணம்!

anger

anger

மகனே தந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய விவகாரம் முசாஃபர் நகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Share this:
தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்த நிலையில், தந்தையை கொன்றதற்கான பகீர் காரணத்தை கைதானவர் தெரிவித்திருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் மாவட்டத்தின் கதொலி பகுதியில் உள்ள கரும்பு தோட்டம் ஒன்றில் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதியன்று கொல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

கொல்லப்பட்ட நபர் அதே பகுதியைச் சேர்ந்த ரெஷ்பால் என தெரியவந்தது. தனது தந்தையை கொலை செய்தவர்கள் இவர்களாகத்தான் இருக்கும் என மூன்று பேரின் பெயர்களை காவல்துறையினரிடம் தெரிவித்த அவரது மகன் சுமித் குமார், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என காவல்துறையினரிடம் கோரிக்கை வைத்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போது, மகனே தந்தையை கொலை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதன் பின்னர் மகன் சுமித் குமாரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் அந்த திடுக்கிடும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது.

Also Read:  தாலிபான்களால் தலைமறைவாக வாழும் 200 பெண் நீதிபதிகள்!

தனது தந்தை ரெஷ்பாலுக்கும், வேறு ஒரு நபருக்கும் ஒரே பாலின உறவு இருந்தது என தெரிவித்த சுமித் குமார், தனது தந்தையின் முறையற்ற உறவால், குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டதாகவும், மானமே போய்விட்டதாகவும் கூறினார். மேலும் தனது தந்தை தனது சொத்துக்களை எல்லாம் அந்த நபரின் பெயருக்கே மாற்றுவதற்கான வேலைகளில் ஈடுபட்டதால் ஆத்திரத்தில் அவரை கொலை செய்துவிட்டு பழியை வேறு சிலர் மீது போட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.

மகனே தந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய விவகாரம் முசாஃபர் நகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read:  வோடபோன் ஐடியா நிறுவனத்தின் சிம் மோசடியால் ₹68 லட்சத்தை இழந்த வாடிக்கையாளர்!

தந்தை செய்த விபரீதம்:

இதே போல பெங்களூரூரைச் சேர்ந்த 30 வயதாகும் தந்தை ஒருவர், தனது கள்ளத்தொடர்பு குறித்து 10 வயது மகன் பேசியதால் ஆத்திரத்தில் அவனை அடித்தே கொலை செய்தார். பின்னர் கள்ளக்காதலியுடனும், மனைவியுடனும் சேர்ந்து மகனின் உடலை காரில் ஏற்றி தமிழகத்தின் பர்கூர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் அப்புறப்படுத்திவிட்டு ஒன்றும் தெரியாதது போல மகனை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தீவிர விசாரணைக்கு பிறகு 10 வயது சிறுவனை அவனது தந்தையே கொலை செய்தது வெளிச்சத்துக்கு வந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: