குடும்பத் தகராற்றில் மனைவியைக் கொண்டு தலையை வெட்டி எடுத்து வந்து காவல் நிலையம் முன்னர் தேசிய கீதம் பாடிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் பரபங்கி மாவட்டத்தில் உள்ள பஹதுர்பூர் கிராமத்தைச் சேந்தவர் அகிலேஷ் ராவத். அவரது மனைவி ரஜனி. அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தை உடல்நலக்குறைவு காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துள்ளது.
அதன்பிறகு கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்நிலையில், நேற்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. அப்போது அகிலேஷ் தனது மனைவியைக் கடுமையாகத் தாக்கி அவரை தரதரவென வீட்டிற்கு வெளியே தள்ளியுள்ளார். பின்னர் ரஜனியை அவர் கூர்மையான ஆயுதங்கள் கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளார்.
படுகாயமடைந்த ரஜனி சம்பவ இடத்திலேயே பலியானார். அப்படியும் விடாமல், பட்டப்பகலில் அவருடைய தலையை வெட்டி, கையில் எடுத்துக் கொண்டு 1.5 கிமீ தூரத்திற்கு நடந்து சென்றுள்ளார்.
அங்கிருந்த காவல் நிலையத்தை நோக்கி சென்ற அவரைக் கண்ட போலீசார், தலையை பறிக்க முயன்றனர். இதனை அடுத்து, தேசிய கீதம் படித்த படியும், பாரத் மாதாகீ ஜே என்று அவர் சொன்னபடியும் இருந்துள்ளார். ஒரு வழியாக அவரிடம் இருந்து தலையைப் பறித்து, கைது செய்தனர்.
குடும்பத் தகராற்றில் மனைவியைக் கொன்று தலையை வெட்டி எடுத்து வந்துள்ளார் என்று மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.