‘டேய் தகப்பா இது நியாயமா!’ - மனைவி சித்தியான சோகக்கதை

திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

2016-ம் ஆண்டு அந்த இளைஞனுக்கு அந்தப்பெண்ணுக்கு இடையே திருமணம் நடந்துள்ளது.

 • Share this:
  இளைஞர்  ஒருவர் தனது தந்தை குறித்து ஆர்.டி.ஐ  செய்ய தனது மனைவி குறித்த அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது. பஞ்சாயத்து போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றுள்ளது.

  உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் நகரைச் சேர்ந்த 22 வயது இளைஞனின் தந்தை துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 48 வயதான இளைஞனின் தந்தை இவருக்கு பண உதவி செய்யாமல் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். தந்தை குறித்து தகவல் அறிய மாவட்ட பஞ்சாயத்து ராஜ் அலுவலத்தில் ஆர்.டி.ஐ செய்து தகவலை சேகரித்துள்ளார். அதில், அந்த இளைஞனின் முன்னாள் மனைவியை தந்தையே திருமணம் செய்துக்கொண்ட அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

  Also Read: மேட்சுக்கு முன்பு உடலுறவு.. உலகக்கோப்பை வெற்றி.. ரகசியம் சொல்லும் ’தி பேர் ஃபுட் கோச்’ புத்தகம்

  இதனைக்கேட்டு ஆத்திரமடைந்த அந்த நபர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இருதரப்பினரையும் சமாதானம் பேச காவல்நிலையத்துக்கு அழைத்துள்ளனர். காவல்நிலையத்தில் வைத்தே இருவரும் மோதிக்கொண்டனர். அவர்களை போலீஸார் சமாதானம் செய்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுகுறித்து பேசிய போலீஸ் அதிகாரிகள், ‘ 2016-ம் ஆண்டு அந்த இளைஞனுக்கு அந்தப்பெண்ணுக்கு இடையே திருமணம் நடந்துள்ளது. குடும்பப் பிரச்னை காரணமாக 6 மாதத்தில் இருவரும் பிரிந்துவிட்டனர். இருவரும் அப்போது மைனர் என்பதால் முறைப்படி திருமணம் பதிவு செய்யவில்லை. இருவரும் இணைந்து வாழலாம் என இளைஞர் அந்தப்பெண்ணை அனுகியுள்ளார். குடிக்கு அடிமையான உன்னுடன் வாழமுடியாது என மறுத்துவிட்டார். மேலும் விவாகரத்து கேட்டுள்ளார். இந்நிலையில் அந்தப்பெண் 18 வயது பூர்த்தியானதும் தனது விருப்பப்படி இளைஞனின் தந்தையை மணந்துக்கொண்டுள்ளார். அவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.

  Also Read: இந்தியாவில் முஸ்லீம்கள் வாழக்கூடாது எனக்கூறுபவன் இந்துவே அல்ல - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு

  இளைஞருடன் திருமணம் செய்ததற்கான சட்டப்பூர்வமான ஆவணங்கள் இல்லை என்பதால் நாங்கள் வழக்குப்பதிவு செய்யவில்லை. அந்தப்பெண்ணும் தனது இரண்டாவது கணவருடன் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார். இதனால் இந்த விவகாரத்தில் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது” என்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: