ஹோம் /நியூஸ் /இந்தியா /

போலீஸ் வேசம் போட்டு மாமூல் வசூலித்த நபர்... கையும் களவுமாக சிக்கினார்

போலீஸ் வேசம் போட்டு மாமூல் வசூலித்த நபர்... கையும் களவுமாக சிக்கினார்

போலீஸ் வேஷம் போட்ட முகேஷ் யாதவ்

போலீஸ் வேஷம் போட்ட முகேஷ் யாதவ்

தன்னை போலீசாக காட்டிக்கொள்ள தனக்கென்று போலி ஆதார் கார்டு, போலீஸ் ஐடி கார்டு போன்ற ஆவணங்களை முகேஷ் யாதவ் தயாரித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Uttar Pradesh, India

  மோசடி செய்யும் போலி நபர்களை காவல்துறையிடம் பொதுமக்கள் புகார் அளித்து தனக்கான நீதி பெறுவதை நாம் பார்த்துள்ளோம். ஆனால், உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு நபர் சினிமா பட பாணியில் போலீஸ் வேஷம் போட்டு மாமூல் வசூலித்து பிழைத்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

  உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரோசாபாத் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் யாதவ். 23 வயதான முகேஷ் யாதவ் 120 கிலோ உடல் எடையுடன் பார்ப்பதற்கே மலை போல இருப்பார். இவர் தனது பிழைப்புக்காக என்ன செய்வதென்று யோசித்து அதற்காக விபரீத முடிவை எடுத்து தற்போது கையும் களவுமாக சிக்கியுள்ளார். தனது தோற்றத்திற்கு ஏற்ப மிரட்டலான போலீஸ் வேலை செய்வோம் என்று யோசித்த முகேஷ், எதற்கு அதற்கான தகுதி தேர்வு எல்லாம் எழுதி பாஸ் செய்து போலீஸ் ஆக வேண்டும் என நினைத்துள்ளார் போலும்.

  எனவே, தனது சைஸ்சுக்கு ஏற்ப போலீஸ் உடை ஒன்றை தைத்து போட்டுக்கொண்டு, நான் இனி போலீஸ் என சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலி போலீசாக களமிறங்கியுள்ளார்.

  அத்துடன் நிற்காமல் தனக்கென போலி ஆதார் கார்டு, போலீஸ் ஐடி கார்டு போன்ற ஆவணங்களையும் தயாரித்துள்ளார். அந்த பகுதியில் போலி போலீசாக ரோந்துக்கு சென்று வாகனங்களை மடக்கி பிடித்து அபராத தொகை, மாமூல்களை வாங்கியுள்ளார். அத்துடன் தனது பிழைப்புக்காக சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் பயணிக்க தனது போலீஸ் அடையாளத்தை பயன்படுத்தியுள்ளார்.

  இவர் நீண்டநாள்களாக செய்து வந்த சேட்டை குறித்த தகவல் அப்பகுதி காவல்துறைக்கு தெரிய வரவே, அவரை பின்தொடர்ந்து காவல்துறையினர் போலீஸ் உடையுடன் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.

  இதையும் படிங்க: பூஜை செய்த புரோகிதரின் காதை கடித்த இளைஞர் - திருமணம் கைக்கூடாத விரக்தியில் வெறிச்செயல்

  தான் சுங்க கட்டணத்தை கட்டாமல் இருக்கவும், கடைகளில் மாமூல் வசூலிக்கவும் தான் போலீசாக நடித்தேன் என முகேஷ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் இருந்து போலி ஆவணங்களை பறிமுதல் செய்த காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Crime News, Fraud, Police, Uttar pradesh