ஹோம் /நியூஸ் /இந்தியா /

போதைக்கு அடிமையான மனைவி.. கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிய கணவன்.!

போதைக்கு அடிமையான மனைவி.. கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிய கணவன்.!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

போதை பழக்கத்திற்கு அடிமையான மனைவியை அவரது கணவரே கூட்டாளியுடன் சேர்ந்து கொலை செய்து துண்டாக வெட்டி வீசிய அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Uttar Pradesh, India

  நாட்டையே உலுக்கிய டெல்லி இளம்பெண் ஷ்ரத்தா கொலை சம்பவத்தை போலவே மற்றொரு கொலை சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சீத்தாபூர் மாவட்டத்தின் குலாரிஹா பகுதியில் கடந்த நவம்பர் 8ஆம் தேதி கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. பின்னர் தடயவியல் உதவியோடு அந்த பெண்ணை காவல்துறை அடையாளம் கண்டனர். அந்த பெண் அப்பகுதியைச் சேர்ந்த ஜோதி என்றும் அவரின் கணவர் பங்கஜ் கடந்த 10 நாள்களாக தலைமறைவாக உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

  இதைத் தொடர்ந்து காவல்துறை நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் பங்கஜ் கைது செய்யப்பட்டார். அவரிடம் காவல்துறை நடத்திய விசாரணையில் தனது மனைவியை கொலை செய்ததை பங்கஜ் ஒப்புக்கொண்டுள்ளார்.பங்கஜ்ஜிற்கு மனைவி ஜோதியுடன் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகியுள்ளது.சமீப காலமாக பங்கஜ்ஜின் மனைவி ஜோதி போதை பழக்கத்திற்கு அடிமையாகி தொடர்ச்சியாக போதைப் பொருள்களை பயன்படுத்தி வந்துள்ளார். அத்துடன் ஜோதி தனது வீட்டை விட்டு வெளியே சென்று பல நாள்கள் வேறு ஒரு நபரின் வீட்டில் தங்கி வந்துள்ளார்.

  இதையும் படிங்க: பிரச்னை தீர காட்டுக்குள் உடலுறவு.. ஜோடி மீது பெவிகுயிக் பசையை ஊற்றி கொடூரமாக கொலை செய்த மந்திரவாதி!

  இது கணவர் பங்கஜ்ஜிற்கு ஆத்திரம் தரவே மனைவியை கண்டித்துள்ளார். இருப்பினும் மனைவி ஜோதி தனது நடவடிக்கையை தொடர்ந்து வந்துள்ளதால், தனது நண்பர் துர்ஜன் உடன் சேர்ந்து மனைவியை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளார்.அதன்படி இருவரும் சேர்ந்து ஜோதியை கொலை செய்துள்ளனர். அடையாளம் தெரியக்கூடாது என்ற நோக்கில் உடலை துண்டுகளாக வெட்டி வீசியுள்ளனர். கொலையாளிகள் பங்கஜ் மற்றும் துர்ஜன் இருவரையும் சீத்தாப்பூர் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.


  Published by:Kannan V
  First published:

  Tags: Crime News, Husband Wife, Murder, Uttar pradesh