• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மாமனார் வீட்டில் பைக் கொடுக்கவில்லை... திருமணமான 24 மணி நேரத்திற்குள் தலாக் கூறிய கணவர்...!

மாமனார் வீட்டில் பைக் கொடுக்கவில்லை... திருமணமான 24 மணி நேரத்திற்குள் தலாக் கூறிய கணவர்...!

தலாக்

தலாக்

திருமணத்திற்காக கொடுத்த வரதட்சனையில் இரு சக்கர வாகனம் இல்லை என கூறி ருக்சானா பனோவிடம் 3 முறை தலாக் கூறியுள்ளார் சஹாஹே அலாம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    உத்தரப்பிரதேசத்தில் திருமணமான 24 மணி நேரத்திற்குள் மனைவியிடம் கணவர் தலாக் கூறிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலம் ஜஹன்கிராபாத் பகுதியை சேர்ந்தவர் சஹாஹே அலாம் என்பவருக்கும் ருக்சானா பனோ என்பவருக்கும் 13-ம் தேதி திருமணம் நடந்தது.

    இந்நிலையில் திருமணத்திற்காக கொடுத்த வரதட்சனையில் இருசக்கர வாகனம் இல்லை என கூறி ருக்சானா பனோவிடம் 3 முறை தலாக் கூறியுள்ளார் சஹாஹே அலாம். திருமணமான 24 மணி நேரத்திற்கு தலாக் கூறி விவகாரத்து சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையடுத்து பெண்ணின் தந்தை மணமகன் வீட்டாருக்கு எதிராக வரதட்சனை கொடுமை சட்டத்தின் கீழ் புகார் கொடுத்தார். புகாரை அடுத்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஆகாஷ் தோமர். ‘விசாரணையை விரைந்து முடித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

    முத்தலாக் தடைச்சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Prabhu Venkat
    First published: