கோவக்சின் முதல் டோஸ் போட்ட நபருக்கு இரண்டாம் டோஸாக கோவிஷீல்ட்டை தவறுதலாக போட்ட மருத்துவமனை

மாதிரி படம்

உத்திரபிரதேசத்தில் கோவக்சின் முதல் டோஸ் போடப்பட்ட நபருக்கு இராண்டாவது டோஸ் கோவிஷீல்ட்டை தவறுதலாக மாற்றிப் போட்டுள்ளனர்.

 • Share this:
  நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கோவக்சின் மற்றும் கோவிஷீல்ட் உள்ளிட்ட இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே உத்திரபிரதேச மாநிலத்தில் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் ஒரு நபருக்கு இரண்டு வெவ்வெறு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.

  மகாராஜ்கஞ்ச் பகுதியை சேர்ந்த உமேஷ் என்பவர் மாவட்ட தலைமை மேம்பாடு அதிகாரியிடம் (Chief Development Officer) டிரைவராக பணிபுரிகிறார். அவரிடம் டிரைவாக பணிபுரியும் சந்தன் குஷ்வாஹா, உமேஷ் மற்றும் அத்தலி மதன் ஆகியோர் இராண்டவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

  உமேஷ்க்கு முதல் டோஸாக கோவக்சின் போடப்பட்ட நிலையில் இராண்டாவது டோஸாக கோவிஷீல்ட் தவறுதலாக போடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தெரிந்த உடன் மற்ற இருவருக்கும் தடுப்பூசி போடவில்லை. தடுப்பூசி மாற்றிப் போடப்பட்ட சமப்வம் தொடர்பாக மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

  இந்த சம்பவம் தொடர்பாக தலைமை மருத்துவ அதிகாரி ஏ.கே.ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், தடுப்பூசி மாற்றிப் போடப்பட்டதால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது. இருப்பினும் இந்த சம்பவம் நடந்திருக்க கூடாது. அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் ஒரே தடுப்பூசியை தான் இரண்டாவது டோஸ்க்கும் வழங்க அறிவுறுத்தி உள்ளோம்“ என்றுள்ளார்.

  தடுப்பூசிகளின் கலவை நோயாளிகளுக்கு பயனளிக்குமா என்பதை அறிய சோதனைகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. வேறுபட்ட இரண்டாவது டோஸ் வைரஸுக்கு எதிராக சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவும் என்று பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
  Published by:Vijay R
  First published: