ஹோம் /நியூஸ் /இந்தியா /

சைக்கிளில் வேகமாகச் சென்றதாக அபராதம்: ரூ.2000 வாங்கிக்கொண்டு ரூ.500-க்கு ரசீது!

சைக்கிளில் வேகமாகச் சென்றதாக அபராதம்: ரூ.2000 வாங்கிக்கொண்டு ரூ.500-க்கு ரசீது!

Bicycle rider

Bicycle rider

  • News18
  • 1 minute read
  • Last Updated :

கேரளாவில் வடமாநில வாலிபர் ஒருவரிடம், சைக்கிளில் வேகமாகச் சென்றதாகக் கூறி காவல்துறையினர் அபராதம் வசூலித்துள்ளனர்.

சைக்கிள் ஓட்டுவது மனதுக்கு உற்சாகத்தை ஏறபடுத்தக் கூடியது. அதோடல்லாமல், சைக்கிள் ஓட்ட ஹெல்மட் அணியத் தேவையில்லை, லைசன்ஸ் தேவையில்லை.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் காசிம். இவர் கேரளாவில் வசித்து, பணியாற்றி வருகிறார். இவர் கேரளாவின் கும்பாலா பகுதியில் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது, கும்பாலா போக்குவரத்துக் காவலர்கள், திடீரென காசிமை மடக்கினர். `நீங்கள் வேகமாக சைக்கிள் ஓட்டியதற்காக அபராதம் கட்ட வேண்டும்’ என்று கூறியுள்ளனர். திகைத்துப் போன காசிம் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துள்ளார்.

காவல்துறையினர் கேட்ட அபராதத் தொகையான 2000 ரூபாயை, சிறிது நேர வாக்குவாதத்துக்குப் பிறகு கொடுத்துள்ளார். காவலர்கள் 2000 ரூபாயைப் பெற்றுக்கொண்டு, 500 ரூபாய்க்கு ரசீது கொடுத்துள்ளனர். அந்த ரசீதில் வாகன எண் குறிப்பிட வேண்டிய இடத்தில், ஒரு பெண்ணின் பைக் எண் குறிப்பிடப்பட்டிருந்தது.

நடந்த சம்பவத்தைக் கூறி, காசிம் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அந்த வீடியோவைப் பார்த்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விசாரணை நடத்தினார். அதில், கும்பாலா காவல்நிலையத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி தான் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக, காவல்துறை கண்காணிப்பாளர் கூறினார்.

First published:

Tags: Bicycle, Fine for over speed, Kerala police, Over speed