முகப்பு /செய்தி /இந்தியா / தலித் என்பதால் அதிகாரிகள் மதிப்பதில்லை.. பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்

தலித் என்பதால் அதிகாரிகள் மதிப்பதில்லை.. பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்

உ.பி. ஜல்சக்தி அமைச்சர் தினேஷ் ராஜினாமா

உ.பி. ஜல்சக்தி அமைச்சர் தினேஷ் ராஜினாமா

மிகவும் கட்டுக்கோப்பான யோகி ஆதித்தயநாத் அரசில் மூன்று அமைச்சர்கள் அடுத்தடுத்து புகார்களை கிளப்பியுள்ளது உபி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் தினேஷ் கத்திக், தனது துறையில் உள்ள ஊழலை சுட்டிக்காட்டியும், தான் தலித் என்பதால் உயர் அதிகாரிகள் மதிப்பதில்லை என புகார் தெரிவித்தும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 45 வயதான தினேஷ் கத்திக், யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிதேச அரசில் ஜல்சக்தி துறை அமைச்சராக உள்ளார். இவர் நேற்று திடீரென்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், இவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

தனது ராஜினாமா குறித்து தினேஷ் கத்திக் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் கூறுகையில், 'தனது துறையில் அதிகாரிகள் நடத்தும் கூட்டம், ஆலோசனைகள் குறித்து எந்த தகவலும் தெரிவதில்லை. தன்னை ஒரு பொருட்டாக மதித்து எந்த தகவலையும் இலக்கா சார்ந்த துறை அதிகாரிகள் கூறுவதில்லை. மேலும், துறையில் இடமாற்றம் போன்ற நடவடிக்கைகளுக்கு லஞ்சம் மற்றும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது .தான் ஒரு தலித் அடையாளத்தை கொண்டவன் என்பதாலே யாரும் மதிப்பதில்லை' என புகார் கூறி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தினேஷ் கத்திக் ராஜினாமா செய்ததாகக் கூறப்படும் நிலையில், நேற்று இவர் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இன்று மாலை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தையும் சந்திக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சுங்கச்சாவடியில் மோதி விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ்.. தூக்கிவீசப்பட்ட நோயாளி - பதைபதைக்கும் வீடியோ காட்சி வெளியானது

உத்தரப் பிரதேசத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் பிரிஜேஷ் பதக்கும் தனது துறையில் அதிகாரிகளின் செயல்பாடுகளை விமர்சித்தும், இடமாற்ற விவகாரங்கள் ஊழல் நடைபெறுவதாகவும் பகீரங்கமாகத் தெரிவித்திருந்தார். அத்துடன் பொதுப் பணித்துறை அமைச்சர் ஜிதின் பிரசாதவும் இதேபோன்ற புகார்களுடன் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை கடந்த செவ்வாய் கிழமை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. மிகவும் கட்டுக்கோப்பான யோகி ஆதித்தயநாத் அரசில் இது போன்று மூன்று அமைச்சர்கள் அடுத்தடுத்து புகார்களை கிளப்பியுள்ளது உபி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அம்மாநில எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Dalit, Uttar pradesh, Yogi adityanath