காவல் அதிகாரியை சுட்டது போலீஸ்தான்! - சர்ச்சையைக் கிளப்பும் பா.ஜ.க எம்.எல்.ஏ

உத்தரப் பிரதேசத்தில் பசுக் காவலர்கள் நடத்திய போராட்டத்தால் உயிரிழந்த காவல் ஆய்வாளரை போலீஸ்தான் சுட்டனர் என்று பா.ஜ.க எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

news18
Updated: December 5, 2018, 3:36 PM IST
காவல் அதிகாரியை சுட்டது போலீஸ்தான்! - சர்ச்சையைக் கிளப்பும் பா.ஜ.க எம்.எல்.ஏ
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த காவல் ஆய்வாளர்
news18
Updated: December 5, 2018, 3:36 PM IST
உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்த காவல்துறை அதிகாரி, காவலர்களாலேயே சுடப்பட்டுள்ளார் என்று பா.ஜ.க எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்திலுள்ள புலந்தர்ஷர் கிராமத்தில் கடந்த திங்கள்கிழமை, பசுக் காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பெரும் வன்முறை ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்நிலையத்துக்கு தீ வைத்தனர். வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. அந்த வன்முறையில் காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் கடுமையாக தாக்கப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் முன்னதாக உயிரிழந்திருந்தார். உடற்கூராய்வில் அவரது உடலிலிருந்து துப்பாக்கி குண்டு கண்டெடுக்கப்பட்டது.

இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக 27 பேர் மீது பெயருடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அடையாள தெரியாத 50-க்கும் மேற்பட்டவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் இறப்பு குறித்து தெரிவித்த பா.ஜ.க எம்.எல்.ஏ சுரேந்தர் சிங், ‘காவல் ஆய்வாளர் இறப்புக்கும் பஜ்ரங்தள் உறுப்பினர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவரது இறப்பு எதிர்பாராதது. பஜ்ரங்தள் உறுப்பினர்கள் கல் வீச்சில்தான் ஈடுபட்டிருந்தனர். காவல்துறையினர்தான் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.

எனவே, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்தான் அவர் பலியாகியுள்ளார். காவல்துறையினர் வேண்டுமென்றே இதைச் செய்யவில்லை. பஜ்ரங்தள் உறுப்பினர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடவில்லை. அவர்கள், போராட்டத்துக்கு துப்பாக்கிக் குண்டுடன் செல்லவில்லை’ என்று தெரிவித்தார்.

இந்த வன்முறைச் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான புலந்தஷர் மாவட்ட பஜ்ரங்தள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் யோகேஷ் ராஜ் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. மற்ற குற்றவாளிகள் அனைவரும் பா.ஜ.க மற்றும் வி.எச்.பி கட்சியைச் சேர்ந்தவர்கள்’ என்று காவல்துறை தெரிவித்துள்ளது. பஜ்ரங்தள் அமைப்பினர் வன்முறையால் பலியான காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங், ‘2015-ம் ஆண்டு, முகம்மது அக்லாஹ் பசுக் காவலர்களால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட வழக்கை விசாரணை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see:

First published: December 5, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்