ஹோம் /நியூஸ் /இந்தியா /

அரசு வாகனத்துடன் இன்ஸ்டாகிராமில் கெத்து போஸ்ட்... ஐஏஎஸ் அதிகாரி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை

அரசு வாகனத்துடன் இன்ஸ்டாகிராமில் கெத்து போஸ்ட்... ஐஏஎஸ் அதிகாரி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை

ஐஏஎஸ் அதிகாரியின் இன்ஸ்டாகிராம் பதிவு

ஐஏஎஸ் அதிகாரியின் இன்ஸ்டாகிராம் பதிவு

தனது தேர்தல் அலுவல் பணிக்காக கொடுக்கப்பட்ட வாகனத்துடன் கெத்தாக போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த ஐஏஎஸ் அதிகாரி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் நவம்பர் 3ஆம் தேதி அறிவித்தது. 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டமன்றத்தின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அன்றைக்கே அறிவிக்கப்படுகிறது.

  தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. மேலும், நிர்வாகப் பொறுப்புகள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வந்த நிலையில், தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பு அலுவலர்களை தேர்தல் ஆணையம் நியமித்து வருகிறது. அதன்படி, அகமதாபாத்தில் உள்ள பாபுன்நகர் மற்றும் அஸ்வாரா என்ற இரு தொகுதிகளில் அபிஷேக் சிங் என்ற ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  அபிஷேக் சிங் சமூக வலைத்தளங்களில் ஆர்வமாகவும், ஆக்டிவாகவும் இருப்பவர். இந்நிலையில், தான் தேர்தல் பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட குஷியில் அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர வேண்டும் என நினைத்துள்ளார். எனவே, தனக்கு குஜராத் அரசு அளித்துள்ள கார் மற்றும் தேர்தல் பாதுகாவலர்களுடன் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

  ஆனால், அதுவே அவருக்கு வினையாகி விட்டது. இவரது இன்ஸ்டா பதிவு தேர்தல் ஆணையம் கவனத்திற்கு போக, பப்ளிசிட்டி ஸ்டன்ட்டாக அரசு பொறுப்பை பயன்படுத்தியதாக புகார் கூறி தேர்தல் பொறுப்பு அலுவலர் பதவியில் இருந்து அவரை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இனி அடுத்த உத்தரவு வரும் வரை தேர்தல் பணியில் ஈடுபடக்கூடாது என உத்தரவில் தெரிவித்துள்ளது.

  இதையும் படிங்க: கட்டாய மத மாற்ற தடை சட்டத்தில் 507 பேர் கைது - உ.பி அரசு தகவல்

  தன் மீதான நடவடிக்கைக்கு அபிஷேக் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது பதிவில் "அந்த பதிவில் எந்த தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இருப்பினும் பொது மக்களின் ஊழியனாக மக்களிடம் தொடர்பு கொள்ளும் நோக்கில் தான் இந்த பதிவை வெளியிட்டேன். இதில் பப்ளிசிட்டி ஸ்டன்ட் ஏதும் இல்லை. இருப்பினும் தேர்தல் ஆணையத்தின் முடிவை பணிவுடன் ஏற்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Election 2022, Election commission of India, Gujarat