திருமண ஊர்வலம் வரை வந்த மணமகன்.. கொரோனா பாசிட்டிவ் அறிக்கையால் நேர்ந்த சோகம்!

மாதிரிப்படம்

ஊர்வலம் செல்ல வேண்டிய சில நிமிடங்களுக்கு முன்பு தான், மணமகனின் கோவிட் -19 சோதனை அறிக்கைகள் வந்தன.

  • Share this:
    மணமகன் அழைப்பு முதல் திருமணம் மற்றும் வரவேற்பு வரை எல்லா நிகழ்ச்சிகளும் தயார் நிலையில் இருந்தும் கடைசி நேரத்தில் மணமகனுக்கு கொரோனா பாசிட்டிவ் என்று அறிக்கை வந்ததால் திருமண ஊர்வலம் நிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் கடந்த திங்களன்று (மே 24ம் தேதி) நடந்துள்ளது. அன்றைய தினத்தில் மணமகன் தர்மேந்திரா மற்றும் அவரது குடும்பத்தினர் உத்தரப்பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தின் பக்கா கிராமத்திலிருந்து அருகிலுள்ள அஸ்கா தமவுரா கிராமத்திற்கு பயணிக்கத் தயாராக இருந்தனர்.

    ஊர்வலம் செல்ல வேண்டிய சில நிமிடங்களுக்கு முன்பு தான், மணமகனின் கோவிட் -19 சோதனை அறிக்கைகள் வந்தன. துரதிர்ஷ்டவசமாக, மணமகனுக்கு கொரோனா நோய்த்தொற்று இருந்தது தெரியவந்துள்ளது. மே 22 ஆம் தேதி அவர் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அவரின் திருமணமானது மே 24 அன்று திட்டமிடப்பட்டது.

    Also Read: அம்மாவுக்கு இறுதிச்சடங்கு.. யாஸ் புயலில் மக்களை பாதுகாக்கும் பணி.. ஒடிசா காவல்துறை அதிகாரியின் அர்ப்பணிப்பு

    தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் குழு மணமகனின் வீட்டிற்கு வந்து ஊர்வலத்தை மேலும் தொடரவிடாமல் தடுத்தி நிறுத்தினர். பின்னர் சுமார் 11 மணி நேரத்தில் திருமணம் நிறுத்தப்பட்டது மற்றும் மணமகன் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்து மவுதஹா சமூக சுகாதார மையத்தின் பொறுப்பாளர் டாக்டர் அனில் சச்சன் கூறுகையில், “மணமகன் சுமேர்பூரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிற விருந்தினர்களுக்கு சம்பவ இடத்திலேயே கோவிட் சோதனையை நாங்கள் நடத்தினோம். அவர்களை கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு அந்தந்த வீடுகளில் தங்களை தனிமைப்படுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளோம். " எனக்கூறியுள்ளார்.

    Also Read: மகளின் காதலனை கொன்று புதைத்த தந்தை- ஆந்திராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

    மணமகனுக்கு கொரோனா பாசிட்டிவ் என அறிக்கைகள் வந்தபோது, ​​குடும்ப உறுப்பினர்கள் அதிகாரிகளுக்கு தெரிவிக்க தயக்கம் காட்டினர் என்று டாக்டர் அனில் மேலும் தெரிவித்தார். அவர்கள் அதை மறைக்க முயன்றனர் என்றும் மற்றும் திருமண ஊர்வலத்தை நடத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் எப்படியோ, தகவல் கசிந்து மவுதஹா சமூக சுகாதார மைய அதிகாரிகளுக்கு அந்த தகவல் சென்றடைந்தது. பின்னர் மையம் தேவையான நடவடிக்கைகளை எடுத்ததால், காவல்துறை அதிகாரிகள் குழு சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டது.

    இதேபோன்ற ஒரு சம்பவம் ஒடிசா மாநிலத்திலும் நடந்துள்ளது. ஒரு மணமகன் தனது திருமண மண்டபத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டபோது, ​​அவரது பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் அவருக்கு பாசிட்டிவ் என்ற ரிசல்ட் வந்தது. மணமகன் மே 17ம் தேதி அன்று கொரோனா வைரஸுக்கான சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கு சோதனை முடிவுகள் நீண்ட நாட்களாக கிடைக்காத போது, திடீரென அவரது திருமண நாளில் அறிக்கை வந்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்த தகவல்கள் வெளியான பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை காலை போலீஸ் அதிகாரிகள் குழு திருமண இடத்தை அடைந்து திருமண நிகழ்ச்சிகளை தடுத்து நிறுத்தியது.

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: