முகப்பு /செய்தி /இந்தியா / முஸ்லீம்களை குறிவைத்து வேட்டையாடுகிறது உ.பி.அரசு- ஓவைஸி தாக்கு

முஸ்லீம்களை குறிவைத்து வேட்டையாடுகிறது உ.பி.அரசு- ஓவைஸி தாக்கு

ஓவைஸி

ஓவைஸி

உத்தரப்பிரதேசத்தில் அனைத்து மதரசாக்கள் மற்றும் மசூதிகளை ஆய்வு மதிப்பீடு செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை பாஜக அரசு உத்தரவிட்டு அது அமல்படுத்தப்பட்டு வருகிறது, இது பலத்த கண்டனங்களை எழுப்பி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Uttar Pradesh, India

உத்தரப்பிரதேசத்தில் அனைத்து மதரசாக்கள் மற்றும் மசூதிகளை ஆய்வு மதிப்பீடு செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு உத்தரவிட்டு அது அமல்படுத்தப்பட்டு வருகிறது, இது பலத்த கண்டனங்களை எழுப்பி வருகிறது.

இதனை எதிர்த்த அனைத்திந்திய மஜ்லிஸே இத்தென்ஹதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சித் தலைவர் அசாசுதீன் ஓவைஸி கடுமையான வார்த்தைகளினால் கண்டித்துள்ளார். “ஏன் உத்தரப்பிரதேச அரசு வக்ஃபு வாரிய சொத்துக்களை மட்டும் குறிவைத்து ஆய்வு செய்து வருகிறது? இந்துக்களின் நன்கொடை வாரியங்கள், அறநிலைய விவகாரங்களையும் மதிப்பாய்வு செய்ய வேண்டியதுதானே? அவைகளையும் மதிப்பாய்வு செய்யுங்களேன்.

நான் ஏன் இதைக் கூறுகிறேன் என்றால் மதரசாக்களை மட்டும் மதிப்பாய்வு செய்வதில் சதி உள்ளது. சதிதான் இப்போது முன்னிலையில் தெரிகிறது. உத்தரப் பிரதேச பாஜக அரசு அரசியல் சாசன 300ம் பிரிவை மீறுகிறது.

யாராவது அரசு சொத்தை வக்பு வாரிய சொத்து என்று பதிவு செய்திருந்தால் அதை நீதிமன்றத்தின் மூலம் வழக்கு தொடர்ந்து சந்திக்க வேண்டியதுதானே? தீர்பாயத்திற்குச் செல்ல வேண்டியதுதானே? இது என்ன மதிப்பாய்வு?

வக்பு வாரியச் சொத்துக்களை உத்தரப் பிரதேச அரசு குறிவைத்து அவற்றை பறிமுதல் செய்யப் பார்க்கிறது.

Read More: அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்? அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல்! யாருக்கு வெற்றி?

இப்படி குறிவைத்து மதிப்பாய்வு செய்வதெல்லாம் பெரும் தவறு. முஸ்லிம்களை அமைப்பு ரீதியாக இலக்காக்கி, குறிவைத்து தாக்குவது மிகப்பெரிய தவறு, இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்றார் அசாசுதீன் ஓவைஸி.

First published:

Tags: Government, Muslim, Uttar pradesh, Yogi adityanath