ஹத்ராஸ் வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் உ.பி. அரசு கோரிக்கை

ஹத்ராஸ் வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் உ.பி. அரசு கோரிக்கை

உச்ச நீதிமன்றம்

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஹத்ராஸ் இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரபிரதேச மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

  மேலும் சிபிஐ விசாரணை நடத்துவதை உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டுள்ளது. மாநில அரசின் நற்பெயரை கெடுக்கும் நோக்கில் விஷமத்தனமான பிரசாரம் செய்யப்பட்டு வருவதாகவும், இதுவரை ஹாத்ரஸ் சம்பவத்தில் நடந்த விசாரணையை சமர்பிப்பதாகவும் அந்த பிரமாணப்பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

  Also read... ஃபேஸ்புக் பகுப்பாய்வில் பிரதமர் மோடியை விட ராகுல்காந்தியின் பக்கத்தில் ஈடுபாடு (Engagements) 40% அதிகரிப்பு.. ஹிந்துஸ்தான் டைம்ஸ் தகவல்..  சாதிக்கலவரம் உண்டாகி, லட்சக்கணக்கானோர் குவிந்து போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக, உளவுத்துறையினர் தகவல் அளித்ததாகவும், இதை அடுத்தே பெண்ணின் குடும்பத்தினரை மாவட்ட நிர்வாகம் சமாதானம் செய்ததாக உத்தரபிரதேச அரசு கூறியுள்ளது. இதன் காரணமாகவே இரவோடு இரவாக உடலை எரித்ததாகவும் பிரமாணப்பத்திரத்தில் அந்த அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.
  Published by:Vinothini Aandisamy
  First published: