• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கார் மோதி விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரம்... ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது உ.பி அரசு

கார் மோதி விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரம்... ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது உ.பி அரசு

லக்கிம்பூர் வன்முறை

லக்கிம்பூர் வன்முறை

லகிம்பூர் கேரி வன்முறையில் 8 பேர் உயிரிழந்தது தொடர்பாக விசாரிக்க, ஒரு நபர் ஆணையம் அமைத்து உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
    உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்க இருதினங்களுக்கு முன் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர்களின் வருகையை கண்டித்து, விவசாயிகள் கறுப்புக்கொடி ஏந்தி வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் நுழைந்தது.

    இதில் கார் மோதி ஏராளமான விவசாயிகள் காயமடைந்தனர். இந்த விபத்தில் 4 விவசாயிகள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்துள்ளனர். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விவகாரம் தேசிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விவசாய அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பினர் கூறும்போது, மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு பாதுகாப்புக்கு வந்த வாகங்களின் வரிசையில் மிஸ்ராவின் மகன் ஒரு காரை ஓட்டி வந்ததாகவும், அவரே விவசாயிகள் மீது காரை ஏற்றியதாகவும், நடந்த சம்பவத்துக்கு அமைச்சரின் மகனே காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இந்நிலையில் லகிம்பூர் கேரி வன்முறையில் 8 பேர் உயிரிழந்தது தொடர்பாக விசாரிக்க, ஒரு நபர் ஆணையம் அமைத்து உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.ஆளுநரின் அறிவுறுத்தலின் பேரில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆணையத்தில், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியான பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவா, விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். அடுத்த 2 மாதங்களுக்குள் வன்முறை மற்றும் 8 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணையை முடித்து, விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Also Read : பிரதமர் மோடியின் பரிசுப்பொருட்களை மின்னணு ஏலத்தில் வாங்க ஆளில்லை

    இதனிடையே, கொலைகள் மூலம் போராட்டக்காரர்களை அமைதிப்படுத்த முடியாது எனவும், சிந்தப்பட்ட அப்பாவி விவசாயிகளின் ரத்தத்திற்கு பொறுப்பேற்று, அரசு நிச்சயம் நீதி வழங்க வேண்டும் என்றும், பாஜக எம்.பி. வருண் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

    கடந்த 3ம் தேதி லகிம்பூர் கேரி பகுதியில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தின் போது. கார் மோதியதில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த செய்தியாளர் ஒருவரும், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தர். மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் தான், காரை செலுத்தி விபத்து ஏற்படுத்தியதாக கூறப்படும் நிலையில் இந்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: