Home /News /national /

பசுக்களைப் பாதுகாக்க புதிய வரி: உ.பி. மக்களை கலக்கத்தில் தள்ளிய யோகி அரசு!

பசுக்களைப் பாதுகாக்க புதிய வரி: உ.பி. மக்களை கலக்கத்தில் தள்ளிய யோகி அரசு!

இந்தியாவின் உத்திரப் பிரதேசத்தில் பாசு பாதுகாப்பு வரி.

இந்தியாவின் உத்திரப் பிரதேசத்தில் பாசு பாதுகாப்பு வரி.

உத்தரப் பிரதேசத்தில் பல பகுதிகளில் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு அங்கே பசு மாடுகள் கட்டப்பட்டுள்ளன என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • News18
  • Last Updated :
    உத்தரப் பிரதேசத்தில் மாவட்டம்தோறும் கோசாலைகளை அமைப்பதற்காக புதிதாக 2 % வரி விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தின் மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றதிலிருந்து அம்மாநிலத்தில் கடுமையான திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். அவரின் சில செயல்பாடுகளுக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

    பசுக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக யோகி ஆதித்யநாத் தொடர்ச்சியாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவரது தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் புதிதாக 2 % பசு பாதுகாப்பு வரி விதிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு ரூ. 100 கோடி ரூபாய் செலவில் மாநிலம் முழுவதும் கிராம பஞ்சாயத்துகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் என அனைத்துப் பகுதிகளிலும் ‘பசு பாதுக்காப்பு சாலைகளை’ அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. ஒரு பசு பாதுகாப்பு சாலையில் ஆதரவற்ற 1,000 பசு மாடுகள் வரை பராமரிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. பல பகுதிகளில் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு அங்கே பசு மாடுகள் கட்டப்பட்டுள்ளன என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஆதரவற்ற பசு மாடுகளுக்கு உரிய பாதுகாப்பு அளியுங்கள் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அதிகாரிகள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம் பசு இறைச்சி விவகாரம் தொடர்பாக புலந்தர்ஷர் மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறை அதிகாரியொருவர் கொல்லப்பட்டார்.

    இதுதொடர்பாக  அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், பசுக்களை கொன்றவர்களை ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார். ஆனால், காவல்துறை அதிகாரி உயிரிழந்தது குறித்து அவர் எதுவும் பேசாதது  சர்ச்சையை ஏற்படுத்தியது.

    Also see:

    Published by:Karthick S
    First published:

    Tags: Cow Slaughter, Uttar pradesh, Yogi adityanath

    அடுத்த செய்தி