உங்கள் மாவட்டத்தைத் தேர்வுசெய்க

  Home /News /national /

  அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் சிலை அமைக்க உ.பி. அரசு முடிவு

  அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் சிலை அமைக்க உ.பி. அரசு முடிவு

  அயோத்தியில் ராமர் சிலை அமைந்தால், உலகிலேயே இந்த சிலைதான் மிக உயரமான சிலையாக கருதப்படும்

  அயோத்தியில் ராமர் சிலை அமைந்தால், உலகிலேயே இந்த சிலைதான் மிக உயரமான சிலையாக கருதப்படும்

  அயோத்தியில் ராமர் சிலை அமைந்தால், உலகிலேயே இந்த சிலைதான் மிக உயரமான சிலையாக கருதப்படும்

  • Last Updated :
  உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் 251 மீட்டர் உயரம் கொண்ட ராமர் சிலையை அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

  இது தொடர்பாக நேற்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உயர் மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.

  குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை 182 மீட்டர் உயரம் கொண்டது. இதுதான் தற்போது வரை உலகிலேயே அதிக உயரம் கொண்டதாக கருதப்படுகிறது. அயோத்தியில் அமைய உள்ள ராமர் சிலை 251 மீட்டர் என்பதால், உலகிலேயே அதிக உயரம் கொண்ட சிலையாக இது கருதப்படும்.  இதற்காக சரயு நதிக்கரையில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவுக்கொண்ட நிலம் ஒதுக்கப்பட்டு விரைவில் சிலை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  இங்கு சிலை மட்டுமல்லாது அருங்காட்சியகம், உணவகங்கள், ராமர் குடில், வேத நூலகம், பசு தொழுவம், வனவாசம் போன்ற தோட்டம், குருகுலம், கலையரங்கம், குரங்குகளுக்கான மருத்துவமனை உள்ளிடவைகளும் அமைக்கப்படும் என கூறப்படுகிறது.

  இதற்காக, சுமார் 2500 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  See Also:

  Published by:Yuvaraj V
  First published:

  Tags: Ayodhya, Ayodhya Ram Temple, Yogi adityanath

  அடுத்த செய்தி