Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /இந்தியா /

போர் விமானியாக உயரப் பறக்க கனவு.. ராணுவ தேர்வில் வெற்றி பெற்று சாதித்த சானியா மிர்ஸா

போர் விமானியாக உயரப் பறக்க கனவு.. ராணுவ தேர்வில் வெற்றி பெற்று சாதித்த சானியா மிர்ஸா

உத்தரப் பிரதேச இளம்பெண் சானியா மிர்ஸா

உத்தரப் பிரதேச இளம்பெண் சானியா மிர்ஸா

நடந்து முடிந்த தேர்வில் அகில இந்திய அளவில் 149ஆவது இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார் சானியா மிர்ஸா.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Uttar Pradesh, India

விளையாட்டு துறையில் சாதனை செய்து பல இளம் பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் சானியா மிர்ஸா. தற்போது உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த சானியா மிர்ஸா என்ற இளம் பெண் ராணுவத் தேர்வில் வெற்றி பெற்று அசத்தி நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கிறார். எளிய குடும்பத்தில் பிறந்த சானியா மிர்ஸா என்ற இளம்பெம் தேசிய பாதுகாப்புப்படையின் தேர்வில் வெற்றி பெற்று போர் விமானியாக பயிற்சி எடுக்கவுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூரில் உள்ள ஜசோவர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷாஹித் அலி. டிவி மெக்கானிக்காக தொழில் புரிந்து வரும் இவருக்கு என்ற சானியா மிர்ஸா என்ற மகள் உள்ளார்.

மிக எளிய குடும்பத்தில் பிறந்த இந்த சானியா மிர்ஸா தான் நாட்டின் பல பெண்களுக்கு நம்பிக்கை தரும் சாதனையாளராக தற்போது உருவெடுத்துள்ளார். சானியாவுக்கு இளம் வயதில் இருந்தே பெண் விமானி ஆக வேண்டும் என்ற ஆர்வம் இருந்துள்ளது. நாட்டின் முதல் மற்றும் ஒரே பெண் விமானியான அவானி சதுர்வேதி தான் சானியாவுக்கு ரோல் மாடல். அவரைப் போலவே தானும் பெண் விமானியாக வர வேண்டும் என்ற கனவு சானியாவுக்கு இருந்துள்ளது.

ஆங்கிலம் அல்லாது தனது தாய் மொழியான இந்தி வழியில் பள்ளி வகுப்பை படித்த சானியாவுக்கு , 12ஆம் வகுப்பு தேர்ச்சிக்குப் பின் ராணுவத்தில் சேருவதற்காக தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுக்காக பயிற்சி எடுத்து வந்துள்ளார். இந்நிலையில், நடந்து முடிந்த தேர்வில் அகில இந்திய அளவில் 149ஆவது இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார் சானியா மிர்ஸா. டிசம்பர் 27ஆம் தேதி இவர் புனேவில் உள்ள ராணுவ பயற்சி மையத்தில் பயிற்சிக்காக சேரவுள்ளார்.

இவர் தனது 4 ஆண்டு பயிற்சியை வெற்றிகரமாக முடித்தால், இந்திய விமானப் படையின் போர்ப்படை விமானியாக ஆவார். இதை சாதிக்கும் பட்சத்தில் நாட்டின் இரண்டாவது பெண் போர் விமானி, இஸ்லாமிய சமூகத்தில் பிறந்த முதல் போர் விமானி என்ற பெருமையை இவர் பெறுவார்.

இதையும் படிங்க: நாட்டு நிலைமை சரியில்ல, பசங்கள வெளிநாட்டில் செட்டில் ஆக சொல்லிட்டேன் - முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு

தனது வெற்றி குறித்து கூறிய சானியா, எனக்கு உந்து சக்தியாக இருந்தவர் விமானி அவானி சதுர்வேதி. அவரை பார்த்துதான் தேசிய ராணுவ அகாடமியில் சேர முடிவு செய்தேன். என்னை பார்த்து இளம் தலைமுறை பெண்கள் எதிர்காலத்தில் சாதனைகள் படைப்பார்கள் என நம்புகிறேன் என்றார்.தனது மகளின் வெற்றியால் மகிழ்ச்சி அடைந்த சானியாவின் தாயார், எங்கள் மகள் குடும்பத்தை மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிராமத்தையும் பெருமையடைய வைத்துள்ளார். கிராமத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் அவர் கனவை விதைத்துள்ளார் என்றார் பெருமிதத்துடன்.

First published:

Tags: IAF, Sania Mirza, Uttar pradesh