Corona Crisis | அக்கம்பக்கத்தினர் உதவாததால் கொரோனாவால் உயிரிழந்த தந்தையின் உடலை அடக்கம் செய்த 15 வயது மகள்!

Corona Crisis | அக்கம்பக்கத்தினர் உதவாததால் கொரோனாவால் உயிரிழந்த தந்தையின் உடலை அடக்கம் செய்த 15 வயது மகள்!

Corona Crisis

இந்து கலாச்சாரத்தின்படி இறந்து போனவரின் சிதைக்கு ஆண் வாரிசு தான் தீ மூட்ட வேண்டும், ஆனால் யாரும் உதவிக்கு இல்லாததால் இறந்தவரின் 15 வயது மகளே தனது அப்பாவின் உடலை எரியூட்டினார்.

  • Share this:
கொரோனாவால் உயிரிழந்த தனது தந்தையின் உடலை அடக்கம் செய்ய அக்கம் பக்கத்தினர் யாரும் உதவிக்கு வராததால் இறந்தவரின் 15 வயது மகளே உடலுக்கு இறுதி சடங்குகள் செய்த சம்பவம் கலங்கச் செய்வதாக இருந்தது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தனது கோர முகத்தை காட்டி வருகிறது.. தினந்தோறும் புதிதாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்து 4 லட்சத்தை நெருங்கிவிட்டது. அதிக எண்ணிக்கையிலானவர்கள் பாதிப்புக்கு ஆளாவதால் மருத்துவமனைகளும், மயானங்களும் நிரம்பி வழிகின்றன.

மருத்துவ உபகரணங்கள், ஆக்ஸிஜன், உயிர் காக்கும் மருந்துகள் போன்றவற்றிற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஒரு நாள் பலி எண்ணிக்கை 3,600ஐ கடந்துள்ளது. கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் நாட்டில் ஒவ்வொரு நாளும் பல அவலங்களை நாம் பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து போன தனது தந்தைக்கு இறுதிச் சடங்குகளை செய்ய அக்கம்பக்கத்தினர் யாரும் முன்வராததால் 15 வயதே ஆன அவருடைய மகள் இறந்தவரின் சிதைக்கு இறுதிச் சடங்குகள் செய்து சிதைக்கும் தீ மூட்டியிருக்கிறார்.
கொரோனா பாதித்தவருக்காக 1,300 கிமீ பயணித்து ஆக்ஸிஜன் சிலிண்டர் கொண்டு வந்து உதவிய நண்பர்!

 

மேற்குவங்க மாநிலத்தின் நார்த் 24 பர்கனாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழ்மையான குடும்பம் ஒன்று உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவின் 19வது செக்டரில் உள்ள வீடு ஒன்றினை அங்கேயே தங்கி பராமரித்து வரும் பணியில் ஈடுபட்டிருந்தது. அந்த வீட்டின் உரிமையாளர்கள் அங்கு வசிக்கவில்லை. இது போன்ற நிலையில் 52வயதான அக்குடும்பத்தின் தலைவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். கடந்த திங்களன்று அவரின் உடல்நிலை மோசமடைந்தது. பெருந்தொற்று காலம் என்பதால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க அவருடைய மனைவியும், 15 வயது மகளும் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டியிருந்தது. நோய்வாய்பட்டவரின் 15 வயது மகள் உதவிக்காக அக்கம் பக்கத்தினரிடம் மன்றாடியபோதும் யாரும் உதவவில்லை.

இரவு 9 மணியளவில் சாலையில் காவல் ரோந்து வாகனம் ஒன்றை அணுகி அவர்களிடம் உதவி கேட்ட போது உள்ளூர் காவல்நிலையத்தில் இருந்து காவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர், ஆம்புலன்ஸில் அவரை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று அனுமதித்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மீண்டும் அவரின் குடும்பத்தினர் காவலர்களை தொடர்பு கொண்டு உதவி கேட்ட நிலையில் அவரை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து தந்துள்ளனர். புரோகிதர் ஒருவரும் அக்குடும்பத்தினருக்கு உதவியாக இருந்து இறுதிச் சடங்குகளை செய்துள்ளார்.
மகளின் திருமணத்துக்கு சேர்த்து வைத்த ரூ.2 லட்சத்தை ஆக்சிஜன் வாங்க நன்கொடையளித்த விவசாயி!

இந்து கலாச்சாரத்தின்படி இறந்து போனவரின் சிதைக்கு ஆண் வாரிசு தான் தீ மூட்ட வேண்டும், ஆனால் யாரும் உதவிக்கு இல்லாததால் இறந்தவரின் 15 வயது மகளே தனது அப்பாவின் உடலை எரியூட்டினார்.
Published by:Arun
First published: