முகப்பு /செய்தி /இந்தியா / தலையில் ஹெல்மெட் போல சோலர் மின்விசிறி.. 77 வயது தாத்தாவின் புதுமையான ஐடியாவுக்கு குவியும் பாராட்டு!

தலையில் ஹெல்மெட் போல சோலர் மின்விசிறி.. 77 வயது தாத்தாவின் புதுமையான ஐடியாவுக்கு குவியும் பாராட்டு!

சோலர் மின்விசிறி அணிந்துள்ள 77 வயது தாத்தா

சோலர் மின்விசிறி அணிந்துள்ள 77 வயது தாத்தா

தலையில் ஹெல்மெட் போல சோலர் மின்விசிறி அணிந்துள்ள 77 வயது தாத்தவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Uttar Pradesh, India

கிரியெடிவிட்டி என்பது ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள் என்று மட்டுமல்லாது சாமாயனியர்களும் பல விஷயங்களில் செய்து காட்டி நம்மை ஆச்சரியத்தில் அவ்வப்போது நிகழும். அப்படித்தான்,  உத்தரப் பிரதேசத்தில் காவி உடை அணிந்த தாத்தா ஒருவர் தனது தலை மற்றும் உடலை கூலாக வைத்திருக்க தலையில் ஹெல்மெட் போல மின்விசிறி அணிந்துள்ளார். இதில் ஆச்சரியம் என்ன வென்றால், இது பேட்டரியில் இயங்கும் ஹெல்மட் அல்ல. சூரிய சக்தியான சோலாரில் இயங்கும் மின்விசிறியாகும்.பகல் நேரத்தில் சோலார் ஆற்றல் மூலமாக தானாகவே இயங்குகிறது இந்த ஹெல்மெட் ஃபேன்.

இந்த ஹெல்மெட் ஃபேனை அணிந்திருக்கும் தாத்தாவின் பெயர் லல்லு ராம். 77 வயதான இவர் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் பூ விற்று வருகிறார்.காவி உடையில் தாடி வைத்துக்கொண்டு தலையில் விநோதமான ஹெல்மெட் மின்விசிறியை அணிந்துள்ள இந்த தாத்தாவை சாலையில் பார்த்த ஒருவர் பேட்டி கண்டு அதை சமூக வலைத்தளத்தில் பரப்பியுள்ளார். இந்த தாத்தா தனது சோலார் மின்விசிறி சூரிய ஆற்றல் மூலம் எப்படி இயங்குகிறது, இதை தான் எவ்வாறு பயன்படுத்துகிறேன் என 50 நொடிகள் விளக்குகிறார்.

"தனக்கு வயதாகிவிட்டதாகவும், வெயிலில் கஷ்டப்பட்டு பூ விற்க வேண்டி இருப்பதால், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க இதை சோலர் மின்விசிறியை ஏற்பாடு செய்துள்ளேன். மாலை 6 மணி வரை இந்த மின்விசிறி இயங்கும்" என்கிறார் லல்லுராம் தாத்தா.

இதையும் படிங்க: குண்டும், குழியுமான சாலையில் ஃபோட்டோசூட் நடத்திய மணப்பெண் - வைரல் ஆன வீடியோ.!

இந்த வீடியோ ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அத்துடன், நெட்டிசன்கள் பலர் தாத்தாவின் கிரியேடிவிட்டியை ஆச்சரியத்துடன் பாராட்டி வருகின்றனர். தர்மேந்திரா என்ற ட்விட்டர் யூசர் பதிவிட்டுள்ள இந்த வீடியோவை சுமார் 32 ஆயிரம் பேர் இதுவரை பார்த்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்து கமெண்டில் பாராட்டியுள்ளனர்.

இந்தியா போன்ற வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் பூமியில் மக்கள் இவ்வாறு தங்களின் தேவைகளை எளிய முறையில் அதேவேளை கிரியெட்டிவாக பூர்த்தி செய்து கொள்வது மகத்தானது என ட்விட்டரில் கருத்துகள் பகிரப்படுகிறது.குறிப்பாக சோலர் ஆற்றலை பயன்படுத்த வேண்டும் என்ற யோசனைக்கு ஸ்பெஷல் வாழ்த்துகளை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

First published:

Tags: Uttar pradesh, Viral News, Viral Video