முகப்பு /செய்தி /இந்தியா / 20க்கும் மேற்பட்ட பசுக்களை ஓடும் ரயில் மீது தள்ளிவிட்ட விவசாயிகள்.. உபியில் அதிர்ச்சி சம்பவம்

20க்கும் மேற்பட்ட பசுக்களை ஓடும் ரயில் மீது தள்ளிவிட்ட விவசாயிகள்.. உபியில் அதிர்ச்சி சம்பவம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் 20க்கும் மேற்பட்ட பசுக்களை ரயில் மீது தள்ளி வதை செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Uttar Pradesh, India

நாட்டின் வட மாநிலங்களில் பசுக்கள் பாதுகாப்பிற்கு கூடுதல் கவனமும் முக்கியத்துவமும் தரப்படுகிறது. பசுக்கடத்தல், பசுவதைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை அங்குள்ள ஆட்சியாளர்களும் மக்களும் எடுப்பதை நாம் பார்த்திருப்போம். பல இடங்களில் இது சரச்சையாகவும் மாறியுள்ளது. அப்படி இருக்க, உத்தரப் பிரதேச மாநிலத்தில் விவசாயிகளே பசுக்கைளை ரயில் மீது தள்ளிட்ட வதை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அம்மாநிலத்தின் சம்பல் மாவட்டத்தில் லாராவன் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வேளாண் தொழில் செய்யும் மக்கள் தான் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்களின் விளை நிலங்களில் உள்ள வேளாண் பயிர்களை அங்குள்ள பசு மாடுகள் மேய்ந்து நாசம் செய்வதாக புகார் தொடர்ந்து எழுந்து வந்துள்ளது. இதன் பேரில் நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியாளர்களிடம் விவசாயிகள் தொடர்ச்சியாக புகார் அளித்துள்ளனர்.

ஆனால், நிர்வகம் நடவடிக்கை எடுக்காத ஆத்திரத்தில் தங்கள் பகுதியில் உள்ள அலிகர்-மொராதாபாத் ரயில் தடத்திற்கு தொந்தரவு செய்யும் 24 பசுக்களை கொண்டு சென்று, ரயில் வரும் நேரம் பார்த்து அதன் மீது பசுக்களை தள்ளிவிட்டுள்ளனர். அப்போது தடத்தில் வந்த டேராடூன் விரைவு ரயில் பசுக்களின் மீது மோதி பெரும் விபத்துக்குள்ளனது.

இதில் 11 பசுக்கள் உயிரிழந்தனர். மற்ற பசுக்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் ஒரு மணிநேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பசு மாடுகள் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.இவர்கள் மீது காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.


First published:

Tags: Cow, Train, Uttar pradesh