• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • காங்கிரஸ் கூட்டணிக்கு நோ... புது ரூட்டில் அகிலேஷ் யாதவ்..

காங்கிரஸ் கூட்டணிக்கு நோ... புது ரூட்டில் அகிலேஷ் யாதவ்..

Rahul gandhi and akhilesh yadav

Rahul gandhi and akhilesh yadav

2017 தேர்தலில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி வைத்தன. ஆனால் இந்த கூட்டணியால் பாஜகவும் எவ்வித சேதாரமும் ஏற்படவில்லை.

  • Share this:
எதிர்வரும் உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி குறித்து பேசிய அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சியின் புதிய திட்டம் குறித்தும், கடந்த கால கசப்பான கூட்டணி அனுபவங்கள் குறித்தும் பேசினார்.

2022ம் ஆண்டு பஞ்சாப், மனிப்பூர், கோவா, உத்தரகண்ட் மற்றும் நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளன. 5 மாநிலங்களிலேயே மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவது உத்தரப்பிரதேசம். அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் எதிர்கட்சிகளான காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் இப்போதே கோதாவில் இறங்க தயாராகிக் கொண்டிருக்கின்றன.

உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற வேண்டுமென வலியுறுத்தி முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், விஜய் ரத யாத்திரை என்ற பெயரில் மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார்.

Also Read: கடனில் தத்தளிக்கும் டாப் 10 நாடுகளில் இடம்பிடித்த பாகிஸ்தான் – உலக வங்கி தகவல்

இந்நிலையில் அகிலேஷ் யாதவ் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அகிலேஷ் யாதவ், கடந்த காலங்களில் சமாஜ்வாதி கட்சி பெரிய தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் அவ்வளவு நன்றாக இல்லை. எனவே சமாஜ்வாதி கட்சி சிறிய மற்றும் மாநிலக் கட்சிகளை ஒன்றுதிரட்டி கூட்டணி ஏற்படுத்தவே முயற்சிக்கும் என்றார்.

இதன் மூலம் உத்தரப்பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் சமாஜ்வாதி கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்பது ஏறக்குறைய உறுதியாகி இருக்கிறது.

Also Read: முதல்வர் மகன் திருமணத்தில் குடிபோதையில் காவலர்கள்.. கேளிக்கையில் திளைத்த போலீசார் – அம்பலப்படுத்திய கடிதம்!

கடந்த 2017ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் அகிலேஷ் யாதவ் கைகோர்ப்பார் என்று சமீப காலமாக பேச்சுக்கள் பரவலாக இருந்து வந்த நிலையில் அகிலேஷ் யாதவிடம் இருந்து இப்படியொரு கருத்து வெளிப்பட்டிருக்கிறது கவனிக்கத்தக்கதாகும்.

2017 தேர்தலில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி வைத்தன. ஆனால் இந்த கூட்டணியால் பாஜகவும் எவ்வித சேதாரமும் ஏற்படவில்லை. மாறாக 312 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று திரும்பிப் பார்க்க வைத்தது. அப்போது சமாஜ்வாதி கட்சிக்கு 47 சீட்களும், பகுஜன் சமாஜுக்கு 19 சீட்களும், காங்கிரஸுக்கு 7 சீட்கள் மட்டுமே கிடைத்தது நினைவிருக்கலாம்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: