Home /News /national /

'எங்கள் உழைப்பை வாக்குகளாக மாற்ற முடியவில்லை' - உ.பி. தேர்தல் முடிவுகள் குறித்து பிரியங்கா காந்தி கருத்து

'எங்கள் உழைப்பை வாக்குகளாக மாற்ற முடியவில்லை' - உ.பி. தேர்தல் முடிவுகள் குறித்து பிரியங்கா காந்தி கருத்து

காங்கிரஸ் கட்சியினரும், நிர்வாகிகளும் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார்கள். மக்களின் பிரச்னைக்காக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்தோம். - பிரியங்கா காந்தி

    உத்தரப்பிரதேச தேர்தல் முடிவு குறித்து விளக்கம் அளித்துள்ள பிரியங்கா காந்தி, தங்களது உழைப்பை வாக்குகளாக மாற்ற முடியவில்லை என்று கூறியுள்ளார்.

    உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பிரியங்கா காந்தி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தார். நடந்து முடிந்த தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று தேர்தல் முடிவுகள் வெளியானபோது மொத்தம் உள்ள 403 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரசால் 2-ல் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 124 தொகுதிகளைக் கைப்பற்றியது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக கூட்டணி 274 தொகுதிகளில் வென்று 2வது முறையாக ஆட்சியமைக்க உள்ளது.

    இதையும் படிங்க - தேர்தலுக்குத் தேர்தல் தோல்வி.. காங்கிரஸ் கட்சி கரைந்தது ஏன்?

    உ.பி. தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து பிரியங்கா காந்தி விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது-

    காங்கிரஸ் கட்சியினரும், நிர்வாகிகளும் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார்கள். மக்களின் பிரச்னைக்காக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்தோம். ஆனால் எங்களது உழைப்பை வாக்குகளாக மாற்ற முடியவில்லை. உத்தரப்பிரதேசம் மற்றும் மக்களின் நலனுக்காக பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நாங்கள் செயல்படுவோம்.
    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க - பாஜக மீதுள்ள நம்பிக்கையை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர் : தேர்தல் வெற்றி குறித்து அமித்ஷா கருத்து

    உத்தரப்பிரதேசத்தில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 7 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 2 ஆக குறைந்துள்ளது. வாக்கு சதவீதமும் 2.5 ஆக குறைந்துள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Election 2022

    அடுத்த செய்தி