ஊடக விவாதங்களில் இனி பகுஜன் சமாஜ் பிரதிநிதிகள் பங்கேற்க மாட்டார்கள் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கூட்டணி படு தோல்வியை சந்தித்தது. மொத்தம் உள்ள 403 இடங்களில் அக்கட்சியால் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
முன்பு ஆளும் கட்சியாக இருந்த பகுஜன் சமாஜுக்கு இப்படியொரு நிலைமையா என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் அடுத்த ஒரு அதிரடி முடிவை மாயாவதி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-
தேர்தல் நேரத்தில் ஊடகங்கள் எங்களுக்கு எதிராக செயல்பட்டன. சாதி ரீதியில் வெறுப்பு மிக்க கருத்துக்களை அம்பேத்கரிய இயக்கமான பகுஜன் சமாஜுக்கு எதிராக பரப்பின. சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சி தோற்றுப் போவதற்கு ஊடகங்களும் ஒர காரணம். எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் இனி ஊடக விவாதங்களில் பங்கேற்க மாட்டார்கள்.
இதையும் படிங்க - பஞ்சாப்பில் ஆட்சி அமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார் பக்வந்த் மான்
பகுஜன் சமாஜ் கட்சியின் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக உத்தரப்பிரதேச தேர்தலில் பல சம்பவங்கள் நடந்துள்ன. இதன் அடிப்படையில் நாங்கள் சோர்வடைய மாட்டோம். மீளாய்வு செய்து மீண்டும் நாங்கள் அதிகாரத்திற்கு வருவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பாஜக கூட்டணி 255 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. பதிவான வாக்குகளில் 41.29 சதவீத வாக்குகள் பாஜக கூட்டணி பக்கம் சென்றுள்ளன.
இதையும் படிங்க - பாதுகாப்புப் படையினரால் ஜம்மு, காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
கடந்த 37 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது என்ற சாதனையை உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பாஜக கடந்த 2000-ம் ஆண்டின்போது உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியை பிடித்தது. ராஜ்நாத் சிங் முதல்வராக இருந்த அந்த சமயத்தில், பாஜகவால் ஓராண்டு கூட ஆட்சியில் நீடிக்க முடியவில்லை. அதன்பின்னர் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் மாறி மாறி ஆட்சியைப் பிடித்தன.
2017-ல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்து, தற்போது இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.