Home /News /national /

உ.பி தேர்தல்: முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா பிரியங்கா காந்தி?

உ.பி தேர்தல்: முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா பிரியங்கா காந்தி?

உத்தரபிரதேச மாநிலத்தில் இளைஞர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியும் வெளியிட்டனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் இளைஞர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியும் வெளியிட்டனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் இளைஞர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியும் வெளியிட்டனர்.

    உத்தரபிரதேசத்தில் 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதலமைச்சர் வேட்பாளர் தான் தான், என பிரியங்கா காந்தி சூசமாக தெரிவித்துள்ளார்.

    ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான ஏற்பாடுகளில் கட்சிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் இளைஞர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தியும், அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் வெளியிட்டனர். அதில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், 8 லட்சம் பணியிடங்கள் மகளிருக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொடக்கப்பள்ளிகளில் ஒன்றரை லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும், கல்விக்கான அரசின் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும், பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள இளைஞர்களுக்கு தொழில் தொடங்க 1 விழுக்காடு வட்டியில் கடன் வழங்கப்படும் என்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரியங்கா காந்தி, தனது முகமே அனைத்து இடங்களிலும் தெரிவதாக கூறினார்.

    Also read:  ‘ஷிஃப்ட் முடிஞ்சு போச்சு, விமானத்தை ஓட்டமுடியாது..!’ அடம்பிடித்த விமானி - பயணிகள் கதறல்..

    இதனிடையே சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மேயின்புரியின் கர்ஹல் தொகுதியில் போட்டியிட போவதாக தகவல்களை வெளியாகின. அகிலேஷ் யாதவ் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல்முறையாகும். 2012- ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவி வகித்த அகிலேஷ் யாதவ், சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார். தற்போது அவர் அசம்கர் தொகுதியின் எம்பியாக உள்ளார்.

    கோவாவில், தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததால், துணை முதலமைச்சர் சந்திரகாந்த கவ்லேகரின் மனைவி சாவித்ரி கவ்லேகரின் சுயேச்சையாக போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இதேப்போல் சட்டப்பேரவை துணைத் தலைவர் இசிடோர் பெர்னாண்டஸ். எம்எல்ஏ தீபக் பவுஸ்கர் ஆகியோரும் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளனர்.

    பஞ்சாபில் தனது பெயருக்கு களங்கம் கற்பித்து வருவதாக குற்றம்சாட்டி, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அவதூறு வழக்கு தொடர உள்ளதாக பஞ்சாப் முதலமைச்சர் சரண் ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார். சன்னியின் மருமகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தியது குறித்து கருத்து தெரிவித்த கெஜ்ரிவால், கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதை பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறியிருந்தார்.

    Also read: பாகிஸ்தான் சிதைந்துவிடும், இம்ரான் கான் ஐஎஸ்ஐ கைப்பாவை - தாலிபான்கள் கடும் தாக்கு
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Congress, Priyanka gandhi, Uttar pradesh

    அடுத்த செய்தி