Home /News /national /

'வாக்கு எண்ணிக்கை வரைதான் எதிர்க்கட்சிகளின் கூட்டணி இருக்கும்' : உ.பி.யில் அமித் ஷா தேர்தல் பிரசாரம்

'வாக்கு எண்ணிக்கை வரைதான் எதிர்க்கட்சிகளின் கூட்டணி இருக்கும்' : உ.பி.யில் அமித் ஷா தேர்தல் பிரசாரம்

அமித்ஷா

அமித்ஷா

பாஜக ஆட்சியின் கீழ் சமூக விரோதிகள் 3 இடத்தில் மட்டுமே இருக்கிறார்கள். ஒன்று சிறையில், இரண்டாவது உத்தரப்பிரதேசத்திற்கு வெளியே, மூன்றாவதாக சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலில் இருக்கிறார்கள்.

    எதிர்க்கட்சிகளின் கூட்டணி வாக்கு எண்ணிக்கை வரைதான் இருக்கும் என்று கூறியுள்ள பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, பாஜகவுக்கு வாக்களிக்கக் கோரி உ.பி.யில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உத்தரப்பிரதேச தேர்தலில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தனித்தனியே கூட்டணி அமைத்து களம் காண்பதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    இதையும் படிங்க : மகாராஷ்டிராவில் முக்கிய உத்தரவு: பெண் போலீசாருக்கான வேலை நேரம் குறைப்பு

    எதிர்க்கட்சிகள் சிதறிக் கிடப்பதன் அடிப்படையில் பாஜக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும், ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்டிரிய லோக் தள கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன.

    இந்நிலையில், முசாபர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அமித் ஷா பேசிய அவர், ‘அகிலேஷ் யாதவும், ஜெயந்த் சவுத்ரியும் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினர். அப்போது இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருப்பதாக கூறினார்கள். எத்தனை நாட்களுக்கு இந்த கூட்டணி நீடிக்கும் என்று தெரியுமா? ஒருவேளை சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தால் அக்கட்சியின் ஆசம் கான் அமைச்சராக இருப்பார். ஜெயந்த் சவுத்ரி வெளியேற்றப்பட்டு விடுவார்.

    இதையும் படிங்க : இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா - இன்று ஒரே நாளில் 2.35 லட்சம் பேர் பாதிப்பு
    பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பேச ஆரம்பித்தால் ஒரு சமூகத்தை மட்டுமே பேசிக் கொண்டிருப்பார். காங்கிரஸ் தலைவர்கள் குடும்பத்தைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பேச ஆரம்பித்தால் ரவுடிகளையும், மாபியாக்களையும் பற்றியே பேசுவார்.


    பாஜக ஆட்சியின் கீழ் சமூக விரோதிகள் 3 இடத்தில் மட்டுமே இருக்கிறார்கள். ஒன்று சிறையில், இரண்டாவது உத்தரப்பிரதேசத்திற்கு வெளியே, மூன்றாவதாக சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலில் இருக்கிறார்கள்.

    உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் குற்றங்கள் குறைந்துள்ளன. மீண்டும் சமாஜ்வாதி அல்லது பகுஜன் சமாஜ் ஆட்சிக்கு வந்தால் உத்தரப்பிரதேசத்தில் சமூக விரோதிகளின் ஆட்சிதான் நடக்கும். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் உத்தரப்பிரதேசத்தை இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக மாற்ற பாஜக நடவடிக்கை எடுக்கும்’ என்று தெரிவித்தார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Amit Shah

    அடுத்த செய்தி