Home /News /national /

தொடரும் ராஜினாமாக்கள்.. உ.பியில் பாஜகவுக்கு அடுத்த அதிர்ச்சி

தொடரும் ராஜினாமாக்கள்.. உ.பியில் பாஜகவுக்கு அடுத்த அதிர்ச்சி

Yogi Adityanath

Yogi Adityanath

UP Election 2022: கடந்த 48 மணி நேரத்தில் 2 அமைச்சர்கள் மற்றும் 6 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இருந்து விலகியது தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அக்கட்சிக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

    யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சர் ஒருவர் நேற்று பதவி விலகிய நிலையில் இன்று மேலும் ஒரு அமைச்சர் பதவி விலகியது பாஜகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்னும் சில வாரங்களில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தல். கடந்த தேர்தலில் 300 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்றிருந்த பாஜக இந்த முறை மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் தேர்தலை எதிர்கொள்கிறது.

    இந்நிலையில் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர் ஸ்வாமி பிரசாத் மெளர்யா நேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு, பாஜகவில் இருந்து திடீரென விலகினார். அவரோடு சேர்த்து அவரின் ஆதரவு பாஜக எம்.எல்.ஏக்கள் நான்கு பேரும் பாஜகவில் இருந்து விலகியுள்ளனர். ரோஷன் லால் வெர்மா, பிரிஜேஷ் பிரஜாபதி, பகவதி சாகர் மற்றும் வினய் ஷாக்யா ஆகிய 4 எம்.எல்.ஏக்களும் நேற்று திடீரென பதவி விலகியதுடன் பாஜகவில் இருந்தும் விலகினர்.

    Also read:  கேப்டன் அமரிந்தர் சிங்குக்கு கொரோனா பாதிப்பு - பஞ்சாபில் பாஜகவுக்கு பின்னடைவு?

    பதவி விலகிய ஸ்வாமி பிரசாத் மெளர்யா, ஜனவரி 14ம் தேதியன்று அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவருடன் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் சமாஜ்வாதி கட்சியில் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏக்களின் பதவி விலகலால் அதிர்ச்சியில் இருந்து பாஜக இன்னும் விடுபடாத நிலையில், இன்று மேலும் ஒரு அமைச்சர் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். யோகி அமைச்சரவையில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்து வந்த தாரா சிங் சவுகான் இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.



    அவரது ராஜினாமா கடிதத்தில் “நான் அர்ப்பணிப்புடன் உழைத்தேன், ஆனால் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட பிரிவினர், தலித்துகள், விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்கள் மீதான இந்த அரசின் அடக்குமுறை அணுகுமுறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளுக்கான இடஒதுக்கீடு புறக்கணிக்கப்படுவதால் வேதனையடைந்து பதவி விலகுகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

    Also read:  Omicron | பூஸ்டர் தடுப்பூசிகளால் பயனில்லை - உலக சுகாதார நிறுவன வல்லுநர்கள் அதிர்ச்சித் தகவல்

    பாஜகவில் இருந்து விலகிய தாரா சிங் சவுகான் சமாஜ்வாதி கட்சியில் இணைவாரா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தாரா சிங் சவுகான் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தை சேர்ந்தவர். மேலும் அவருக்கு அச்சமூகத்தில் நல்ல செல்வாக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    கடந்த 48 மணி நேரத்தில் 2 அமைச்சர்கள் மற்றும் 6 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இருந்து விலகியது தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அக்கட்சிக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
    Published by:Arun
    First published:

    Tags: BJP, Yogi adityanath

    அடுத்த செய்தி