Home /News /national /

ஊழியரை இஸ்லாமிய மதத்திற்கு கட்டாயமாக மாற்றியதாக புகார் - உ.பி மருத்துவர் மீது வழக்கு

ஊழியரை இஸ்லாமிய மதத்திற்கு கட்டாயமாக மாற்றியதாக புகார் - உ.பி மருத்துவர் மீது வழக்கு

புகார் அளித்த இளைஞர் செல்போன் திருட்டு வழக்கில் கைதாகி அண்மையில் விடுதலையாகியுள்ளார்.

புகார் அளித்த இளைஞர் செல்போன் திருட்டு வழக்கில் கைதாகி அண்மையில் விடுதலையாகியுள்ளார்.

புகார் அளித்த இளைஞர் செல்போன் திருட்டு வழக்கில் கைதாகி அண்மையில் விடுதலையாகியுள்ளார்.

தன்னிடம் பணிபுரிந்த ஊழியரை இஸ்லாமிய மதத்திற்கு கட்டாயமாக மாற்றியதாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் துமாரியாகஞ்ச் பகுதியைச் சேர்ந்த மருத்துவரான பரூக்கி கமால் என்பவர், தன்னிடம் பணிபுரிந்து ஊழியரை கட்டாயமாக மதம் மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அவர் மீது மாநில காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறது.

டாக்டர் பரூக்கி அப்பகுதியில் கிளினிக் ஒன்றை நடத்திவருகிறார். அவரிடம் பணிபுரிந்தவர் ராம்ராஜ் யாதவ். இவரை அம்மருத்துவர் கட்டாயமாக குரான் வசனங்களை படிக்க வைத்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றியதாக ராம்ராஜ் யாதவ் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 2019ஆம் ஆண்டு தன்னை மதம் மாற்றி தனது ஆதார் கார்டில் உள்ள பெயரை கராம் ஹுசைன் என்ற மாற்றியதாகவும் ராம்ராஜ் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க - மீண்டும் தலைதூக்கம் கொரோனா - 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

இதுதொடர்பாக அரசு அலுவலர்களின் உதவியை தான் நாடியதாகவும், ஆனால் அவர்கள் தனக்கு நீதி வழங்கவில்லை எனவும் ராம்ராஜ் கூறியுள்ளார். ராம்ராஜ்ஜின் புகாரை அடுத்து டாக்கர் பரூக்கி, அவருக்கு உதவியாக இருந்த இருவர் மீது கட்டாய மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உத்தரப் பிரதேச காவல்துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது.

அதேவேளை, புகார் அளித்த இளைஞர் செல்போன் திருட்டு வழக்கில் கைதாகி அண்மையில் விடுதலையாகியுள்ளார். எனவே, அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெறுவதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க - அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதை தடுக்க இயலாது: தேர்தல் ஆணையம் விளக்கம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2020ஆம் ஆண்டு கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான ஹரியானாவில் கடந்த மாதம் மதமாற்ற தடைச் சட்டம் அமலுக்கு வந்தது. இந்தியாவில் தற்போது ஒடிசா, மத்தியப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், ஹரியானா ஆகிய 10 மாநிலங்களில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் அமலில் உள்ளது.
Published by:Musthak
First published:

அடுத்த செய்தி