• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கொரோனா தொற்று; வெண்டிலேட்டர் வசதியில்லை; 50 வருடம் பணியாற்றிய மருத்துவமனையிலேயே உயிரிழந்த மருத்துவர்

கொரோனா தொற்று; வெண்டிலேட்டர் வசதியில்லை; 50 வருடம் பணியாற்றிய மருத்துவமனையிலேயே உயிரிழந்த மருத்துவர்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

50 வருடங்கள் தான் பணியாற்றிய மருத்துவமனையில் மனைவியின் கண்முன்னே அவரது இறுதிநிமிடங்கள் கழிந்தது

  • Share this:
    கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமாக உள்ளதால்நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க இரவு ஊரடங்கு மற்றும் தீவிர கட்டுப்பாடுகளை அரசு கொண்டு வந்தாலும் தொற்று எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. படுக்கை வசதிகள் கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு, ரெம்டெசிவர் மருத்துக்கான தட்டுப்பாடும் இங்கு உள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் (அலகாபாத்) மாவட்டத்தில் ஒரு மருத்துவர் வெண்டிலேட்டர் வசதியுடைய படுக்கை கிடைக்காமல் 50 ஆண்டுகளாக தான் பணியாற்றிய மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யதாத் கண்களுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடும் தெரிவதில்லை. மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் அவதிப்படுபவர்களின் நிலையும் புரிவதில்லை. உ.பி.யில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்று வதந்தி பரப்பினால் சட்டம் தன் கடமையை செய்யும் என அறிக்கை விடுகிறார்.

    85 வயதான ஜே.கே. மிஷ்ரா என்ற மூத்த மருத்துவர் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள எஸ்.ஆர்.என் மருத்துவமனையில் கடந்த 50 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுள்ளார். ஏப்ரல் 13-ம் தேதி மூச்சுவிடுவதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. கோவிட் -19 தொற்றுக்கான அறிகுறிகளும் இருந்தது. மூன்று நாள்கள் கழித்து ஏப்ரல் 15-ம் தேதி எஸ்.ஆர்.என் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோன தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்தில் அவரது உடல்நிலை மோசமடைந்தது.

    உடனடியாக அவருக்கு வெண்டிலேட்டர் வசதியுடைய படுக்கை தேவைப்பட்டது. அந்த மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லை. மாவட்டத்தின் பல்வேறு மருத்துவமனைகளை நாடியுள்ளனர். அவருக்கு எங்கும் வெண்டிலேட்டர் வசதியுடைய படுக்கை கிடைக்கவில்லை. தனது மனைவியின் கண்ணெதிரே தனது இறுதிநிமிடங்களை கழித்தார். 50 வருடங்கள் தான் பணியாற்றிய மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.

    இதுகுறித்து பேசிய எஸ்.ஆர்.என் மருத்துவமனை நிர்வாகி, “ மருத்துவமனையில் வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் இருக்கின்றன. இந்த படுக்கைகள் அனைத்திலும் நோயாளிகள் உள்ளனர். இங்கிருந்து எந்த நோயாளிகளையும் அதிகாரிகளால் வேறு மருத்துவமனைக்கு அப்புறப்படுத்த முடியவில்லை.” என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: