Home /News /national /

மருத்துவரை பழிவாங்க அவரின் 8 வயது மகனை கொலை செய்த கம்பவுண்டர்கள்!!

மருத்துவரை பழிவாங்க அவரின் 8 வயது மகனை கொலை செய்த கம்பவுண்டர்கள்!!

கொல்லப்பட்ட சிறுவன்

கொல்லப்பட்ட சிறுவன்

சிறுவனின் தந்தையான மருத்துவரிடம் அவருக்கு யார் மீதும் சந்தேகம் இருக்கிறதா எனவும், அவருக்கு ஏதேனும் முன்விரோதங்கள் இருந்ததா எனவும் போலீசார் விசாரித்தனர்.

    மருத்துவரால் பணி நீக்கம் செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த முன்னாள் ஊழியர்களான இரண்டு கம்பவுண்டர்கள், பழி தீர்க்கும் எண்ணத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மருத்துவரின் மகனை கடத்தி கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் புலந்சாகர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தனது 8 வயது மகன் திடீரென மாயமானதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 28) போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுவனை தீவிரமாக தேடி வந்தனர்.

    அதே நேரத்தில் சிறுவனின் தந்தையான மருத்துவரிடம் அவருக்கு யார் மீதும் சந்தேகம் இருக்கிறதா எனவும், அவருக்கு ஏதேனும் முன்விரோதங்கள் இருந்ததா எனவும் போலீசார் விசாரித்தனர். அந்த நேரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது கிளினிக்கில் வேலை பார்த்த இரண்டு உதவியாளர்களை (கம்பவுண்டர்கள்) வேலையில் செய்த தவறு காரணமாக மருத்துவரால் பணி நீக்கம் செய்யப்பட்ட தகவலை போலீசார் அறிந்தனர்.

    Also read:  2வது முறையாக இம்ரான் கானை சந்திக்க மறுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்!!

    இதனையடுத்து சந்தேகமடைந்த போலீசார், இருவர் குறித்தும் விசாரித்தனர், மேலும் அவர்கள் சிறுவனை கடத்தியிருக்கக் கூடும் என்பதற்கான ஆதாரங்களையும் சேகரித்தனர். அதனடிப்படையில் இருவரையும் பிடித்து போலீசார் தங்கள் பாணியில் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது, சிறுவனை தாங்கள் இருவரும் தான் கடத்தி கொலை செய்து உடலை மறைத்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்கள் உடலை மறைத்து வைத்ததாக கூறிய இடத்தில் தேடி சிறுவனின் உடலை நேற்று (ஜனவரி 30) கைப்பற்றினர்.

    Also read:  தாலிபான்களை எதிர்த்த நியூசி பெண் ஊடகவியலாளர்.. தாலிபான்களிடமே தஞ்சம்!!

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பணி நீக்கம் செய்யப்பட்டதால் ஆத்திரத்தில் இருந்து வந்த இருவரும், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், மருத்துவரை பழிவாங்கும் எண்ணத்தில், அவரின் 8 வயது மகனை கடத்தி துடிதுடிக்க கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
    Published by:Arun
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள்

    அடுத்த செய்தி