தடையை மீறி பட்டாசு கடை வைத்தவர் கைது: தந்தையை விடுவிக்குமாறு கதறிய சிறுமி- இனிப்புகள் வழங்கி சமாதானம் செய்த போலீஸ்

உத்தரபிரதேசத்தில் தனது தந்தையை கைது செய்ய வேண்டாம் என்று சிறுமி முட்டி மோதி கெஞ்சிய, வீடியோ வைரலானதை அடுத்து, சிறுமியின் இல்லத்துக்கு போலீசார் சென்று தீபாவளி கொண்டாடினர். இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

தடையை மீறி பட்டாசு கடை வைத்தவர் கைது: தந்தையை விடுவிக்குமாறு கதறிய சிறுமி- இனிப்புகள் வழங்கி சமாதானம் செய்த போலீஸ்
சிறுமியுடன் இனிப்பு வழங்கி தீபாவளி கொண்டாடிய உபி போலீசார்
  • Share this:
உத்தரபிரதேசத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையும் மீறி ஒருவர் குர்ஜா என்ற இடத்தில் கடந்த 12ஆம் தேதி பட்டாசு கடை திறந்தார். கடைக்காரரை போலீசார் காவல்துறை வாகனத்தில் ஏற்றியபோது கடைக்காரரின் மகள் தனது தந்தையை கைது செய்ய வேண்டாம் என காவல்துறை வாகனத்தில் தலையால் முட்டிக்கொண்டு கெஞ்சினார். இந்த காட்சி பலரையும் கண்கலங்க வைத்தது.


மேலும் படிக்க...தடையை மீறி பட்டாசு வெடிப்பு: டெல்லியில் மோசமானது காற்றின் தரம்- மக்கள் அவதி

கடைக்காரரரை கைது செய்து அழைத்துச்சென்றதையும் சிறுமியின் அழுகையையும் அறிந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடைக்காரரை விடுவிக்க உத்தரவிட்டார். இந்நிலையில் தீபாவளியான சனிக்கிழமை காவல்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்டோர் சிறுமியின் இல்லத்துக்கு சென்று இனிப்புகளை வழங்கினர்.சிறுமியின் மனதில் காவல்துறையினரை பற்றி தவறான கண்ணோட்டம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இனிப்பு வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
First published: November 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading