ஹோம் /நியூஸ் /இந்தியா /

என் சகோதரியை அடித்தே கொன்று தூக்கில் மாட்டியது போலீஸ் - உ.பி.யில் நடந்த பயங்கரம்

என் சகோதரியை அடித்தே கொன்று தூக்கில் மாட்டியது போலீஸ் - உ.பி.யில் நடந்த பயங்கரம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

உத்தரப் பிரதேச மாநிலம் சந்தவ்லியில் நிஷா யாதவ் என்ற பெண் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய சம்பவத்தில் பலியான பெண்ணின் சகோதரி போலீசார் தன் சகோதரியை அடித்து உதைத்து பிறகு தூக்கில் தொங்க விட்டதாக பரபரப்ப்பு குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

உத்தரப் பிரதேச மாநிலம் சந்தவ்லியில் நிஷா யாதவ் என்ற பெண் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய சம்பவத்தில் பலியான பெண்ணின் சகோதரி போலீசார் தன் சகோதரியை அடித்து உதைத்து பிறகு தூக்கில் தொங்க விட்டதாக பரபரப்ப்பு குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

மன்ராஜ்பூரில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வரும் குடும்பத்தில் பலியான நிஷா யாதவ்வின் தந்தை கன்னையா யாதவ், போலீஸ் ஷீட்டில் உள்ள குற்றவாளி ஹிஸ்டரி ஷீட்டர் என்று கூறுவார்களே அப்ப்படிப்பட்ட குற்றப்பட்டியலில் இருப்பவர் கன்னையா யாதவ். இவரை வழக்கு தொடர்பாக கைது செய்ய போலீஸார் அவர் வீட்டுக்குச் சென்றனர்.

அப்போது என்ன நடந்தது என்பதி பலியான நிஷா யாதவ்வின் சகோதரி குஞ்சா யாதவ் ஆஜ் தக் தொலைக்காட்சியில் விவரித்தார், அதில், ஞாயிறன்று கன்னையா வீட்டினுள் போலீசார் அதிரடியாக நுழைந்தனர். கைது செய்வதற்கான எந்த ஒரு வாரண்ட் என்று எதுவும் இல்லாமல் கன்னையா யாதவ் எங்கே என்று கேட்டு மகள்களை டார்ச்சர் செய்துள்ளனர். இவர்கள் எவ்வளவோ மன்றாடியும் வந்திருந்த ஆண் போலீஸ், பெண் போலீஸ் இருவரும் சேர்ந்து சகோதரிகளை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

“நாங்கள் எதிர்த்தோம். என் சகோதரி அறைக்குள் சென்று கதவை தாழிட முயன்றாள். ஆனால் போலீசார் அவரைப் பிடித்து கண்டபடி தாக்கினர்.என்னையும் போட்டுத் தாக்கினர். அறைக்குள் என் சகோதரியை கதறக் கதற அடித்தனர் போலீசார். என் சகோதரி வலியால் கதறித்துடித்தாள், ஆனால் சிறிது நேரத்தில் என் சகோதரியிடமிருந்து எந்த சப்தமும் வரவில்லை.”

இந்நிலையில் குஞ்ஜா யாதவ் அறைக்குள் சென்று பார்த்த போது மின்விசிறியில் நிஷா தூக்கில் தொங்கிய காட்சியைப் பார்த்து கதறி அழுதிருக்கிரார்.

இவர்கள் போலீஸ்தான் அடித்து தூக்கில் தொங்க விட்டு தற்கொலை என்று நாடகமாடுவதாக புகார் அளித்தனர். இவர்கள் புகாருக்கு மாறாக போஸ்ட் மார்ட்டம் அறிக்கையில் நிஷா உடலில் எந்த ஒரு உட்காயமும் வெளிக்காயமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நிஷாவின் உடலின் தொண்டை அருகேவும், இடது தாடையிலும் காயம் இருந்தது தெரியவந்துள்ளது.

போலீஸ் அராஜகம் என்று நிஷா குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்டேஷன் ஹவுஸ் ஆபீசர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

First published:

Tags: Crime News, Uttar pradesh