பிளாஸ்டிக் ஸ்டூல் மூலம் தற்காப்பு: 4 போலீசார் சஸ்பெண்ட்!

போலீசார் சஸ்பெண்ட்

போராட்டக்காரர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க காவலர் ஒருவர் தலையில் பிளாஸ்டிக் ஸ்டூலை மாட்டியுள்ளதும் மற்றொரு நபர் , மரக் கூடை ஒன்றை கேடயமாக பயன்படுத்தியது வீடியோவில்  பதிவாகியிருந்தது.  ஒரு கையில், பிளாஸ்டிக் ஸ்டூல், மரக் கூடை மற்றொரு கையில் லத்தியுடன் அவர்கள் வன்முறையை ஒடுக்க முயன்றனர்

  • Share this:
உத்தரபிரதேசத்தில் வன்முறை சம்பவத்தின்போது பிளாஸ்டிக் ஸ்டூல் போன்றவற்றை கேடயமாக பயன்படுத்திய விவகாரத்தில் போலீசார்   4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் அக்ரம்பூரில் இரண்டு நபர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து கடந்த செவ்வாயன்று, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், கடந்த புதன்கிழமையன்று இறந்தவர்களின் உடல்கள் மூலம் சாலையை மறித்து மீண்டும் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.   போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக கலவர தடுப்பு பிரிவு போலீசார்,  பாதுகாப்புப் படையினர் ஆகியோர் துப்பாக்கியுடன் குவிக்கப்பட்டனர்.

ஒருகட்டத்தில், நிலைமை கைமீறி சென்றது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம மக்கள், போலீசாரை நோக்கி கல்வீசி தாக்குதல் நடத்த தொடங்கினர். இந்த தாக்குதலில்  சில போலீசார் பலத்த காயமடைந்தனர். இந்த வன்முறை சம்பவம் குறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதில்,  போராட்டக்காரர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க காவலர் ஒருவர் தலையில் பிளாஸ்டிக் ஸ்டூலை மாட்டியுள்ளதும் மற்றொரு நபர் , மரக் கூடை ஒன்றை கேடயமாக பயன்படுத்தியது  பதிவாகியிருந்தது.  ஒரு கையில், பிளாஸ்டிக் ஸ்டூல், மரக் கூடை மற்றொரு கையில் லத்தியுடன் அவர்கள் வன்முறையை ஒடுக்க முயன்றனர்.  போலீசாரின் இந்த அஜாக்கிரதையான செயல் கடும் சர்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது. மொத்தம் 5 வீடியோக்கள் வெளியாகியுள்ளது. மற்ற வீடியோக்களில் காவலர்களும், கிராம மக்களும் ஒருவர் மீது ஒருவர் கல்வீசி தாக்குதல் நடத்தும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.

இதையும்  படிங்க: பிரசாந்த் கிஷோர் பெயரில் மோசடி:  காங்கிரஸ் தலைவர்களுக்கு மர்ம நபர்கள் வலை...

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 4 போலீசார் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக உத்தர பிரதேச போலீசாரின் ட்விட்டர் பக்கத்தில்,’ சட்டம் ஒழுங்கு சூழலை எதிர்கொள்ள நிலையான செயல் நடைமுறைகள், தற்காப்பு கேடயங்கள் போன்றவை அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.  உன்னவ் பகுதியில் கலவரம் நடந்தபோது,போதிய தற்காப்பு கருவிகள் இன்றி போலீசார் இருந்தது தொடர்பாக காவல்துறை இயக்குநர்   மாவட்ட எஸ்.பி.யிடம் விளக்கம்  கேட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலைய அதிகாரி உட்பட 4 பேர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கொரோனா மூன்றாவது அலையால் குழந்தைகளுக்கு ஆபத்தா...
Published by:Murugesh M
First published: