பெண் மீது ஏறி உட்கார்ந்து தாக்குதல்? வைரல் வீடியோவுக்கு போலீஸ் மறுப்பு!

வைரல் வீடியோ

மகேந்திர படேல் தன்னை அடித்து தரையில் இழுத்ததாகவும் தன் மீது ஏறி உட்கார்ந்து தாக்குதல் நடத்தியதாகவும் ஆர்த்தி ஊடகங்களிடம் கூறியுள்ளார். சிவமை விடுதலை செய்ய மகேந்திர படேல் லஞ்சம் கேட்டதாகவும் அதனை தர மறுத்ததால் அவர் ஆத்திரமடைந்ததாகவும் சிவம் குடும்பத்தினர் கூறினர்

 • Share this:
  உத்தரப் பிரதேசத்தில் பெண் ஒருவர் மீது உதவி ஆய்வாளர் ஏறி உட்கார்ந்து தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகியுள்ளது.

  உத்தரப் பிரதேச மாநிலம் துர்காதாஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவம் யாதவ். இவர் உள்ளூர் பஞ்சாயத்து தேர்தலில் வேட்பாளர் ஒருவரை மிரட்டியதாக கூறப்படுகிறது.  இதையடுத்து, உதவி ஆய்வாளர் மகேந்திர படேல் தலைமையிலான காவலர்கள் சிவம் யாதவை கைது செய்ய அவரது கிராமத்துக்கு சென்றுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அப்போது, சிவம் மனைவி ஆர்த்தி  உட்பட அவரது உறவினர்கள்  உதவி ஆய்வாளருடன் மோதலில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஆர்த்தியின் மீது மகேந்திர படேல் அமர்ந்து தாக்குதலில் ஈடுபடுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

   

  இதையும் படிங்க: இந்தியாவில் மின்னல் தாக்குதல் 34% அதிகரிப்பு: ஆய்வில் தகவல்!


  மகேந்திர படேல் தன்னை அடித்து தரையில் இழுத்ததாகவும் தன் மீது ஏறி உட்கார்ந்து தாக்குதல் நடத்தியதாகவும் ஆர்த்தி ஊடகங்களிடம் கூறியுள்ளார். சிவமை விடுதலை செய்ய மகேந்திர படேல் லஞ்சம் கேட்டதாகவும் அதனை தர மறுத்ததால் அவர் ஆத்திரமடைந்ததாகவும் சிவம் குடும்பத்தினர் கூறினர்.

  மேலும் படிக்க்: 10வயது மகனுடன் ஆபாச நடனமாடிய தாய்.. இணையத்தில் வைரலான வீடியோ !


  இந்நிலையில், இந்த வீடியோ தொடர்பாக  உத்தரப் பிரதேச போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.  கான்பூர் டெகாட் போலீசார் வெளியிட்ட வீடியோவில், சிவம் குடும்பத்தினர் மீது மகேந்திர படேல் தவறி விழுந்ததாகவும், அவரின் சட்டை காலரை  சிவமின் மனைவி பிடித்து இருந்ததாகவும் அவர் விடுவித்தவுடன் போலீஸ் அதிகாரி உடனடியாக எழுந்துவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  போலீசார் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
  Published by:Murugesh M
  First published: