சமூக சமையல் கூடங்களைத் தொடங்கியது உத்தரபிரதேச காங்கிரஸ்..!

கிரேட்டர் நொய்டா,புலந்தேஷர், ஹப்ப;ர், வாரணாசி,மற்றும் பதேபூர் ஆகிய இடங்களில் சமூக சமையல் கூடங்கள் துவக்கப்பட்டது

சமூக சமையல் கூடங்களைத் தொடங்கியது உத்தரபிரதேச காங்கிரஸ்..!
community kitchen
  • Share this:
ஏழைகளுக்கு உணவு வழங்குவதற்காக உத்தரபிரதேச காங்கிரஸ் சார்பில் சமூக சமையல் கூடம் துவக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக மத்திய அரசு நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. ஏழைகள், ஆதரவற்றவர்கள் வேலையும் இல்லாமல் உணவின்றி வாடும் நிலையில், முதலில் லக்னோ, ஃபதேபூர், நோய்டா என உத்தரபிரதேசத்தின் பல மாவட்டங்களின் சமூக சமையல் கூடங்கள் உருவாக்கியுள்ளது காங்கிரஸ்.

பிறகு கிரேட்டர் நொய்டா,புலந்தேஷர், ஹப்ப;ர், வாரணாசி,மற்றும் பதேபூர் ஆகிய இடங்களில் சமூக சமையல் கூடங்கள் துவக்கப்பட்டது. இது குறித்து அப்பகுதி காங்கிரஸ் தலைவர் அஜய் லல்லு கூறுகையில் ’காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா வழிகாட்டுதலின் படி இந்த சேவை துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழைகளுக்கு உதவ முடியும். யாரும் பசியுடன் தூங்க விடக் கூடாது என்பதே எங்களின் ஒரே நோக்கம். எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் மக்களுக்கு உதவுவதற்காக நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்’ என்று தெரிவித்திருக்கிறார்.


First published: April 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading