முகப்பு /செய்தி /இந்தியா / தெலங்கானா பாக்யலக்ஷ்மி கோயிலில் வழிபாடு செய்த யோகி ஆதித்யநாத்

தெலங்கானா பாக்யலக்ஷ்மி கோயிலில் வழிபாடு செய்த யோகி ஆதித்யநாத்

பாக்யலக்ஷ்மி கோயிலில் வழிபட்ட யோகி ஆதித்யநாத்

பாக்யலக்ஷ்மி கோயிலில் வழிபட்ட யோகி ஆதித்யநாத்

இரு நாள் தேசிய செயற்குழு கூட்டத்தின் இறுதியாக இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சார்மினாரில் அமைந்துள்ள பாக்கியலட்சுமி கோவிலில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வழிபாடு நடத்தினார்.

ஹைதராபாத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கி நடைபெறுகிறது.  இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உள்ளிட்ட அக்கட்சியின் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் ஹைதராபாத் வந்துள்ளனர்.

நேற்று நண்பகல் ஹைதராபாத் விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்றார். அதேவேளை, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரதமர் மோடியை நேரில் வரவேற்கவில்லை. அன்மை காலமாக தெலங்கானா ராஷ்டிரிய சமிதிக்கும், பாஜகவுக்கும் மோதல் போக்கு நிலவிவரும் நிலையில், பிரதமர் மோடியை சந்திப்பதை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மீண்டும் தவிர்த்துள்ளார்.

இரு நாள் தேசிய செயற்குழு கூட்டத்தின் இறுதியாக இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.

இந்நிலையில் ஐதராபாத்தின் அடையாளமாக திகழும் சார்மினார் கட்டிடத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ள பாக்கிய லட்சுமி கோவிலுக்கு இன்று காலை சென்ற உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வழிபட்டார் வழிபட்டார். யோகி ஆதித்யநாத் வருகையை முன்னிட்டு சார்மினார் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பாக்கியலட்சுமி கோவில் ஹைதராபாத்தில் இருப்பதால் ஹைதராபாத்திற்கு முன்னர் பாக்கிய நகரம் என்று பெயர் இருந்ததும், இடைப்பட்ட காலத்தில் பாக்கிய நகரத்தின் பெயர் ஹைதராபாத் ஆக மாற்றப்பட்டது. அங்கு பாஜக ஆட்சி அமைத்தால் மீண்டும் ஹைதராபாத் நகரத்திற்கு பாக்யநகர் என பெயர் சூட்டப்படும் என யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜகவினர் தொடர்ந்து கூறிவருகின்றனர்.

First published:

Tags: BJP, Hyderabad, Yogi adityanath