ஹோம் /நியூஸ் /இந்தியா /

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை காலமானார்..!

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை காலமானார்..!

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை 10.44 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தந்தை ஆனந்த் சிங் பிஷ்ட் உடல்நலக்குறைவால் காலமானார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் தந்தை ஆனந்த் சிங் சில நாட்களாக உடல்நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனையால் அவருக்கு செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டிருந்தது.

எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை 10.44 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று உத்திரபிரதேச கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஸ் கே அவஸ்தி தெரிவித்துள்ளார்.

யோகி ஆதித்யநாத் தந்தை காலமான செய்தி வெளியானதை தொடர்ந்து பாஜக தலைவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published:

Tags: Yogi adityanath