Home /News /national /

பசுவைக் கொன்றால் 10 ஆண்டுகள் வரை சிறை - உ.பி.யில் அவசரச் சட்டம்

பசுவைக் கொன்றால் 10 ஆண்டுகள் வரை சிறை - உ.பி.யில் அவசரச் சட்டம்

 உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

Uttar Pradesh |

    பசுவை கொன்றால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் உத்தரபிரதேசத்தில் அவசரச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

    அனுமதியின்றி மாட்டு இறைச்சியை எடுத்துச் சென்றால் வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுநரும் கைது செய்யப்படுவார்கள் என அவசரச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

    பசு வதைக்கு ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

    குற்றவாளிகள் தலைமறைவானால் அவர்களது புகைப்படங்களை பொது இடங்களில் ஒட்டவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இறைச்சிக்காக கொல்வதற்கு கொண்டு செல்லப்படும் பசுக்கள் மீட்கப்படும்போது, ஒரு வருடத்திற்கு அவற்றிற்கான பராமரிப்பு செலவை குற்றவாளிகளே ஏற்க வேண்டும் என்றும் அவசரச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Also read... CAA-வை எதிர்த்ததால் அரசியல் அகதியாக்கப்படுவார் மம்தா பானர்ஜி... அமித் ஷா சூளுரை!






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Cow Slaughter, Yogi adityanath

    அடுத்த செய்தி