உத்தரபிரதேச மாநிலம் சம்பால் பகுதியில் கடந்த 27-ந்தேதி இரவு விவேக் அக்னிகோத்ரி என்ற வாலிபருக்கும், அப்பகுதியை சேர்ந்த 23 வயதான பட்டதாரி இளம்பெண் ஒருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போழுது வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் மாலைகளை மாற்றிக்கொண்டபோது, திடீரென மணமகன் விவேக் அக்னிகோத்ரி, மணமகளை முத்தமிட்டார். இதனால் மணமகள் விருந்தினர்கள் அனைவரது முன்னிலையிலும் அவர் முத்தமிட்டது தனக்கு அவமானமாக கருதி திருமண விழாவை நிறுத்தினார். இதனால் அனைவரும் மணப்பண்ணின் குடும்பத்தினரை சமதானப்படுத்த முயன்றும் பெண்ணின் முடிவை மாற்ற முடியவில்லை.
அனைவரின் முன்னிலையில் அநாகரிகமாக நடந்து கொள்ளும் ஒருவரை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்று காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். காவல்துறையினரும் மணப்பெண்ணை சமதானப்படுத்திய போதும் அது நடக்கவில்லை.
மேலும் அந்த பெண் காவல்நிலையத்தில் அளித்த புகாரில் மண மேடையில் இருந்த போது மணமகன் என்னை தகாதமுறையில் தொட்டதாகவும், அவர் எதிர்பாராமல் செய்த செயலால் அதிர்ச்சி அடைந்தேன் மற்றும் அவமானப்படுத்தப்பட்டேன் என புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டை மணமகன் விவேக் அக்னிகோத்ரி மறுத்துள்ளார். மணமகளுடன் பந்தயம் கட்டியதன் அடிப்படையிலேயே அவருக்கு மணமேடையில் வைத்து முத்தம் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். அனைவரும் முன்னிலையிலும் முத்தமிட்டால் ரூ.1,500 தருவதாகவும், இதை செய்ய முடியாவிட்டால் ரூ.3000 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும் பந்தயம் கட்டியிருந்ததாக அவர் கூறினார். மணமகனின் இந்த புகாருக்கு மணமகள் மறுத்துள்ளார்.மணமேடையில் மணமகளுக்கு முத்தமிட்டதால் திருமணம் நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.