• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • உத்தரப்பிரதேச ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கபளீகரம் செய்த பாஜக! - யோகி ஆதித்யநாத்தை பாராட்டிய பிரதமர்!

உத்தரப்பிரதேச ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கபளீகரம் செய்த பாஜக! - யோகி ஆதித்யநாத்தை பாராட்டிய பிரதமர்!

யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடி

யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடி

மொத்தம் உள்ள 725 இடங்களில் 635 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. சில இடங்களை பாஜகவின் கூட்டணி கட்சிகள் கைப்பற்றியுள்ளன.

  • Share this:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெருவாரியான வெற்றியை பதிவு செய்து, மீண்டும் ஒரு பிரம்மாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது பாஜக.

உத்தரப்பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் சில கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. நகர்ப்புற, மாவட்ட உள்ள்ளாட்சித் தேர்தல்கள் ஏற்கனவே நடத்தப்பட்ட நிலையில் நேற்று (ஜூலை 10) ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஜில்லா பரிஷத் எனப்படும் மாவட்ட சேர்மன்களுக்கான தேர்தலில் எதிர்கட்சிகளை வாஷ் அவுட் செய்து பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தது போல மீண்டும் ஒரு முறை பாஜக அசத்தலான வெற்றியை பெற்றிருக்கிறது.

825 பிளாக் பஞ்சாயத்து தலைவர்களுக்கான தேர்தல் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கி நள்ளிரவு வரை நீண்டது. இதில் மொத்தம் உள்ள 725 இடங்களில் 635 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. சில இடங்களை பாஜகவின் கூட்டணி கட்சிகள் கைப்பற்றியுள்ளன.

Also Read:   உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தல் 2021: எதிர்கட்சிகளை கபளீகரம் செய்தது பாஜக!

இத்தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறாமல் பின் தங்கியது. உத்தரப்பிரதேச சட்டமன்றத்துக்கு அடுத்த ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஆளும் பாஜகவின் செயல்பாடு அக்கட்சியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Also Read:   விண்வெளிக்கு செல்லும் இங்கிலாந்தின் பெரும் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சனுக்கும் கடலூருக்கும் என்ன தொடர்பு?

தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் உத்தரப்பிரதேசத்தின் 17 மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தலில் போட்டியிடவிடாமல் பாஜகவினர் தடுத்ததாக எதிர்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் பாஜகவின் வெற்றிக்காக, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பிரதமர் மோடி பாராட்டியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், தேர்தல் முடிவுகள் பொதுமக்கள் பாஜகவுக்கு சாதகமாக இருப்பதைக் காட்டுவதாகவும், இது ஆளும் அரசாங்கம் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை வெற்றிகரமாக அமல்படுத்தியதன் காரணமாகும் என்றும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: