போலீஸ் எஸ்.ஐ.யை அடித்து உதைத்த பாஜக கவுன்சிலர் - வைரல் வீடியோ

Lingam A S | news18
Updated: October 20, 2018, 3:15 PM IST
போலீஸ் எஸ்.ஐ.யை அடித்து உதைத்த பாஜக கவுன்சிலர் - வைரல் வீடியோ
எஸ்.ஐ சுக்பாலை தாக்கும் பாஜக கவுன்சிலர் (Photo:ANI)
Lingam A S | news18
Updated: October 20, 2018, 3:15 PM IST
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தன்னுடைய ஹோட்டலில் வைத்து போலீஸ் எஸ்.ஐ.யை பாஜக கவுன்சிலர் பலமாக அடித்த வீடியோ வைரலாக பரவி வருகின்றது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட் பகுதியில் உள்ள பன்கார்கேதாவில் இருக்கும் ஹோட்டலில் போலீஸ் எஸ்.ஐ சுக்பால், பெண் வழக்கறிஞர் ஒருவருடன் சாப்பிட சென்றுள்ளார். அப்போது, ஹோட்டல் சர்வருக்கும், போலீஸ் எஸ்.ஐ சுக்பாலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து, சர்வர் ஹோட்டலின் உரிமையாளரான முனிஷ் குமாரை வர வைத்துள்ளார். பாஜக கவுன்சிலராக இருக்கும் முனிஷ், ஹோட்டலுக்கு வந்து சுக்பாலிடம் சண்டை போட்டு, அவரின் கன்னத்தில் பலமாக அடித்தார். பல முறை அடித்ததால், சுக்பால் கீழே விழுந்தார்.


பின்னர், மீண்டும் எழுந்த சுக்பாலிடம் முனிஷ் ஆவேசமாக வாக்குவாதம் நடத்தி, மீண்டும் பலமாக தாக்கியுள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

First published: October 20, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...